Covovax as booster dose vaccine
கோவோவாக்ஸ் தடுப்பூசியை 'பூஸ்டர் டோஸ்' ஆக பயன்படுத்துவதற்கான மூன்றாம் கட்ட பரிசோதனைக்கு அனுமதி அளிக்கலாம்' என, மத்திய மருந்து தர கட்டுப்பாட்டு அமைப்பின் நிபுணர்கள் குழு பரிந்துரை அளித்து உள்ளது. அமெரிக்காவை சேர்ந்த 'நோவோவாக்ஸ்' நிறுவனத்திடம் இருந்து உரிமம் பெற்று, 'கோவோவாக்ஸ்' என்ற கொரோனா தடுப்பூசியை 'சீரம் இந்தியா' நிறுவனம் தயாரித்து வருகிறது. இதை, 18 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு அவசரகால பயன்பாட்டுக்கு டி.சி.ஜி.ஐ., எனப்படும் இந்திய மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு ஏற்கனவே அனுமதி அளித்துள்ளது.
கோவோவாக்ஸ் தடுப்பூசி (Covovax Vaccine)
மத்திய அரசின் கொரோனா தடுப்பூசி திட்டத்தில் இந்த மருந்து இன்னும் இணைக்கப்படவில்லை. இந்நிலையில் கோவோவாக்ஸ் தடுப்பூசியை பூஸ்டர் டோஸாக செலுத்துவதற்கு மூன்றாம் கட்ட பரிசோதனைக்கு அனுமதி அளிக்கும்படி சீரம் இந்தியா நிறுவனம் விண்ணப்பித்து இருந்தது.
இந்த மனுவை பரிசீலித்த மத்திய மருந்து தர கட்டுப்பாட்டு அமைப்பின் நிபுணர் குழு, 'மூன்றாம் கட்ட பரிசோதனைக்கு அனுமதி அளிக்கலாம்' என, பரிந்துரை செய்துள்ளது.
ஒரு டோஸ் மட்டுமே செலுத்தக்கூடிய ரஷ்யாவின் 'ஸ்புட்னிக் லைட்' தடுப்பூசியின் மூன்றாம் கட்ட பரிசோதனைக்கு நிபுணர் குழு சமீபத்தில் அனுமதி அளித்தது.
மேலும் படிக்க
ஜூன் மாதத்தில் கொரோனா 4ம் அலை: ஆய்வில் தகவல்!
உடலுக்கு நன்மை அளிக்கும் சிறந்த ஸ்நாக்ஸ் பார்ட்னர் பிஸ்தா பருப்பு தான்!
Share your comments