1. செய்திகள்

பசுக்களைப் பாதுகாக்கவும், விழிப்புணர்வை ஏற்படுத்தவும் பசு அறிவியல் தேர்வு!

KJ Staff
KJ Staff
Cow Science Exam
Credit : MyTricks

நாட்டுப் பசுக்களை பற்றிய விழிப்புணர்வை இளைய தலைமுறையினருக்கு ஏற்படுத்த பசு அறிவியல் தேர்வு (Cow Science Exam) வருகின்ற பிப்ரவரி மாதம் 25 ஆம் தேதி நடக்கவிருக்கிறது. ‘காமதேனு கவு-விஞ்ஞான் பிரச்சார்-பிரசார் எக்ஸாமினேஷன் எனும் தேர்வில் மாணவர்களை கலந்து கொள்ள ஊக்குவிக்குமாறு பல்கலைக்கழக மானியக் குழு அனைத்து பல்கலைக்கழகங்களையும் கேட்டுள்ளது.

நாட்டுப் பசுக்கள் குறித்து விழிப்புணர்வு:

மானியக் குழு செயலா் ரஜ்னிஷ் ஜெயின் (Rajnish Jain) அனைத்து பல்கலைக்கழகங்களின் துணை வேந்தா்களுக்கு எழுதிய கடிதத்தில், ” பிப்ரவரி 25 அன்று இந்த இணையவழித் தேர்வு (Online exam) நாடு முழுவதும் நடத்தப்படுகிறது. இந்த முயற்சியில் மாணவர்களின் பரவலான பங்கை உறுதிப்படுத்தும் வகையில், தேர்வில் தங்களை பதிவு செய்து கொள்ள மாணவர்களை ஊக்குவிக்க வேண்டும்” என்றார்.

நாட்டுப் பசுக்கள் குறித்து இளம் மாணவர்களிடையேயும், மக்களிடையேயும் விழிப்புணர்வை (Awarness) அதிகரிக்கும் வகையில், “காமதேனு கவு-விஞ்ஞான் பிரச்சார்-பிரசார் எக்ஸாமினேஷன்” என்னும் தேர்வை நடத்த இருப்பதாக தேசிய காமதேனு ஆயோக் சில நாட்களுக்கு முன்பு தெரிவித்த நிலையில் யுஜிசியின் இந்த கடிதம் வெளியாகியுள்ளது. இத்தேர்வை யார் வேண்டுமானாலும் எழுதலாம்.

12 மொழிகளில் தேர்வு:

ஆங்கிலம், இந்தி மற்றும் 12 பிராந்திய மொழிகளில் 100 மதிப்பெண்களுக்கு இந்த தேர்வு நடைபெறும். ஆரம்ப வகுப்புகள் முதல் எட்டாம் வகுப்பு வரை, ஒன்பதாம் வகுப்பில் இருந்து 12-ஆம் வகுப்பு வரை, கல்லூரி மாணவர்களுக்காக, பொதுமக்கள் என நான்கு மட்டத்தில் தேர்வு நடைபெற உள்ளது. பசுக்கள் குறித்த ஆர்வத்தை அனைத்து இந்தியர்களிடையே ஏற்படுத்தவும், பசுக்களின் அதிகம் அறியப்படாத நன்மைகளையும், தொழில் வாய்ப்புகளையும் (Career opportunity) குறித்து அறியச் செய்யவும் இது வழி வகுக்கும் என தேசிய காமதேனு ஆயோக் தெரிவித்திருந்தது.

பாடக் குறிப்பு

முன்னதாக, தேர்வு தொடர்பாக ஆயோக் 54 பக்க “பாடக் குறிப்பு ” ஒன்றை ஆயோக் தனது இணைய தளத்தில் பதிவேற்றியிருந்தது. “கிருமி நாசினிகள் (Gems killer), “டூத் பாலிஷ்”, “கதிரியக்க எதிர்ப்பு” பண்புகள் பசு சாணத்தில் (Cow dung) உள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டது. சமூக ஊடகங்களில் இந்த தகவல் வைரலான பின்பு, இணையதளத்தில் இருந்து பாடக்குறிப்பு நீக்கப்பட்டது.

Krishi Jagran
ரா.வ. பாலகிருஷ்ணன்

மேலும் படிக்க

பயிர் செழிப்பிற்கு புத்துயிர்ப் பெறும், பாரம்பரிய ஏர்க் கலப்பை உழவு முறை!

பீட்ரூட் அறுவடைத் துவக்கம்! நல்ல விலைக்கு விற்பனையாவதால் விவசாயிகள் மகிழ்ச்சி!

English Summary: Cow Science exam to Protect Cows and Raise Awareness! Published on: 18 February 2021, 08:41 IST

Like this article?

Hey! I am KJ Staff. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.