குஜராத்தில் உள்ள பசு காப்பகத்தில், பசுவின் பால் (Cow's Milk), சிறுநீரை பயன்படுத்தி தயாரிக்கப்பட்ட ஆயுர்வேத மருந்துகள் வாயிலாக, கொரோனாவுக்கு சிகிச்சை அளிக்கும் மையம் துவக்கப்பட்டுள்ளது. இந்தியா முழுவதும் கொரோனா இரண்டாவது அலை ருத்ரதாண்டவம் ஆடி வரும் நிலையில், தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டு போடப்பட்டு வருகிறது. இந்நிலையில், இந்த ஆயுர்வேத மருந்தின் தன்மை எவ்வாறு இருக்கும் என்பதை நாம் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
கொரோனா சிகிச்சை மையம்
குஜராத்தில், முதல்வர் விஜய் ரூபானி தலைமையிலான பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்குள்ள பனஸ்கந்தா மாவட்டம், டிடோடா கிராமத்தில், பசு காப்பகம் ஒன்று உள்ளது. இங்கு கொரோனா சிகிச்சை மையம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த மையத்தில், பசுவின் பால், சிறுநீர், நெய் ஆகியவற்றைப் பயன்படுத்தி தயாரிக்கப்பட்ட ஆயுர்வேத மருந்துகள் (Ayurvedic Medicine) வாயிலாக, தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளவர்களுக்கு சிகிச்சைஅளிக்கப்படுகிறது.
இது பற்றி, பசு காப்பகத்தின் நிர்வாகி மோகன் ஜாதவ் கூறியதாவது: பசுவின் பால், தயிர், நெய், சிறுநீர் உள்ளிட்டவற்றால் தயாரிக்கப்பட்ட, 'பஞ்சகவ்யம்' உள்ளிட்ட மருந்துகள் வாயிலாக, கொரோனாவால் பாதிக்கப் பட்டவர்களுக்கு சிகிச்சை அளித்து வருகிறோம். இதற்கு நல்ல பலன் கிடைத்துள்ளது. நோயாளிகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை (Immunity) அதிகரிக்க, பசுவின் பாலில் தயாரிக்கப்படும், 'சியவன பிராஷ்' என்ற மருந்தும் வழங்குகிறோம். மையத்தில் இரண்டு ஆயுர்வேத மருத்துவர்களுடன், எம்.பி.பி.எஸ்., டாக்டர் ஒருவரும் பணியாற்றுகிறார். இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் படிக்க
வேகமாக வைரஸ் பரவுவது எப்படி? அதிர்ச்சி தகவல் அளித்த ஆராய்ச்சியாளர்கள்!
கொரோனாவைத் தடுக்கும் முயற்சியில், புதிய கட்டுப்பாடுகள் இன்று முதல் அமல்!
Share your comments