பயிர் நிவாரணம் பெறும் விவசாயிகளின் பட்டியலை சரிபார்க்கும் பணிகளில், வேளாண் துறையினர் தீவிர கவனம் செலுத்தி வருகின்றனர். புயலால் பாதிப்படைந்த பயிர்களுக்கு நிவாரணம் அளிக்க, தமிழக அரசு நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.
நிவாரணம் 600 கோடி
டிசம்பரில் உருவான, 'நிவர் (Nivar) மற்றும் புரெவி (Burevi)' புயல்களால், தமிழகத்தில் பயிர்கள் பாதிக்கப்பட்டு, 5 லட்சம் விவசாயிகள் நஷ்டம் அடைந்துள்ளனர். இவர்களுக்கு நிவாரணம் வழங்க, அரசு, 600 கோடி ரூபாயை ஒதுக்கி உள்ளது. நெல் (Paddy) உள்ளிட்ட பயிர்கள் பாதிப்புக்கு, 2.5 ஏக்கருக்கு, 20 ஆயிரம் ரூபாயும், நீண்ட காலப் பயிர் பாதிப்புக்கு 25 ஆயிரம் ரூபாயும் நிவாரணம் வழங்கப்பட உள்ளது. மாவட்ட வாரியான பயிர் பாதிப்பு பட்டியல் (Crop Damage list), மாவட்ட ஆட்சியர்கள் வாயிலாக, சென்னையில் உள்ள வேளாண் துறை இயக்குனர் அலுவலகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது.
தனிக்குழு ஆய்வு:
பயிர் பாதிப்பு விபரங்களையும், பாதிக்கப்பட்ட விவசாயிகள் பட்டியலையும் தனிக் குழுவினர் (Seperate team) ஆய்வு செய்து வருகின்றனர். நிவாரணம் வழங்குவது குறித்து, பேரிடர் மேலாண்மை ஆணையர் பனீந்தர்ரெட்டி, வேளாண் துறை செயலர் ககன்தீப் சிங் பேடி, இயக்குனர் தட்சிணாமூர்த்தி, தோட்டக்கலைத் துறை இயக்குனர் சுப்பையன் (Subbaiyan) மற்றும் மாவட்ட கலெக்டர்கள், 'வீடியோ கான்பரன்ஸ்' வாயிலாக, நேற்று மாலை ஆலோசனை நடத்தினர்.வரும், 7ம் தேதி முதல், பயிர் நிவாரணம் வழங்கும் பணிகளை துவக்கி, ஒரு வாரத்திற்குள் முடிக்க, திட்டமிடப்பட்டுள்ளது.
பயிர் சேதத்திற்கான நிவாரணத்தை விரைவாக வழங்கினால், விவசாயிகள் நிம்மதி அடைவார்கள். அதோடு பயிர்க் காப்பீட்டு (Crop Insurance) தொகையும் கூடிய விரைவில் விவசாயிகளை சென்றடைந்தால் நல்லது.
Krishi Jagran
ரா.வ. பாலகிருஷ்ணன்
மேலும் படிக்க
நெல்கொள்முதல் நிலையங்களுக்கு பொறுப்பாளர்களாக விவசாயிகளை நியமிக்க வேண்டும்! விவசாயிகள் வலியுறுத்தல்!
Share your comments