1. செய்திகள்

ஊரடங்கு மேலும் 14 நாட்கள் நீட்டிக்கப்படலாம்- தளர்வுகளுக்கு வாய்ப்பு இல்லை!

Elavarse Sivakumar
Elavarse Sivakumar
Curfew in Tamil Nadu may be extended for another 14 days !
Credit : DNA India

கொரோனாத் தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்தும் விதமாக தமிழகத்தில்மே 24-ம் தேதி வரை அமலில் உள்ள முழு ஊரடங்கு மேலும் சில வாரங்கள் நீட்டிக்கப்படலாம் எனத் தகவல் வெளியாகியுள்ளது.

தீவிரமடையும் தணிக்கை (Intensifying audit)

தமிழகத்தில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வரும் நிலையிலும் பாதிப்பு குறைந்தபாடில்லை. தினசரி பாதிப்பு 33 ஆயிரத்தைக் கடந்து சென்றுள்ளது. நாள் ஒன்றுக்கு சராசரியாக 300 பேர் பலியாகின்றனர்.

10 மணி வரை விற்பனை (Sale until 10AM)

அத்தியாவசியப் பொருள்கள் மட்டும் காலை 6 மணி முதல் 10 மணி வரை விற்பனை செய்யப்படுகிறது. இருப்பினும் மக்கள் நடமாட்டம் குறையாவில்லை. இதையடுத்துக் காவல்துறையினர் தேவையில்லாமல் சாலையில் சுற்றுபவர்களை மடக்கிப்பிடித்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

4 காரணங்களுக்கு மட்டும் அனுமதி (Allowed for 4 reasons only)

மக்கள் நடமாட்டத்க் குறைக்கும் வகையில் இ பதிவு முறை அமல்படுத்தப்பட்டுள்ளது.
இ பாஸ் முறை போன்று விண்ணப்பித்து ஒப்புதலுக்காகக் காத்திருக்கத் தேவையில்லை எனினும் இ பதிவு முறையில் திருமணம், இறப்பு, முதிய பெற்றோர்களைப் பேணுதல் போன்ற 4 காரணங்களுக்கு மட்டும் அனுமதி அளிக்கப்பட்டது.

திருமணத்திற்கு அனுமதி மறுப்பு (Denial of permission for marriage)

இதில் திருமணம் என்ற காரணத்தைச் சொல்லி பலரும் தவறாக இ பதிவு முறையைப் பயன்படுத்துவதால் அந்த அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

கொரோனா இலவசமா? (Is Corona free?)

  • கொரோனா பொது முடக்கத்தால் மக்களின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்படும் நிலையில் அதை சமாளிக்க மளிகைப் பொருள்கள் இலவசமாக வழங்கப்படுகிறது. அத்துடன் முதல் தவணையாக மே மாதத்துக்கு 2000 ரூபாய் கொரோனா நிவாரணத் தொகை வழங்கப்படுகிறது.

  • ஆனால் இதை வாங்குவதற்காக மக்கள் பல இடங்களில் தனிமனித இடைவெளியை பின்பற்றாமல் ஒன்று கூடுவது அச்சத்தை ஏற்படுத்துகிறது.

கடைகள் திறப்பு நேரம் நீட்டிக்கப்படுமா? (Will store opening hours be extended?)

காலை 8 மணி முதல் 10 மணி வரை கடைகள் இயங்கி வரும் நிலையில் திறந்திருக்கும் நேரத்தை பகல் 12 மணி வரை நீட்டிக்க வர்த்தகர்கள் சங்கம் கோரிக்கை வைத்துள்ளது. தமிழக அரசு இந்த கோரிக்கையை நிறைவேற்றுமா, மே 24க்குப் பிறகு ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. ஆனால் ஊரடங்கு தளர்வு இப்போதைக்கு இல்லை என்றே தலைமைச் செயலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ஊரடங்கு நீட்டிப்பா? (Will the curfew be extended?)

தமிழகத்தைப் பொறுத்தவரை கொரோனா பரவல் வேகம் ஊரடங்குக்குப் பின் சற்றுக் குறைந்ததாகக் கூறப்பட்டாலும் எண்ணிக்கைத் தொடர்ந்து அதிகரித்தபடியே வருகிறது.
அதேநேரத்தில் கேரளா, மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்கள் தொடர்ந்து ஊரடங்கை நீட்டித்து வருகின்றன. இதனால் தமிழக அரசும் மேலும் இரு வாரங்களுக்கு ஊரடங்கை நீட்டிக்கும் என்றே கூறப்படுகிறது.

ஜூன் 30 வரை நீட்டிப்பா? (Extend until June 30?)

ஜூன் 30ஆம் தேதி வரை முழு ஊரடங்கு கடைப்பிடித்தால் மட்டுமே கொரோனாவின் இரண்டாவது அலையிலிருந்து மக்களைக் காப்பாற்ற முடியும் என பெரும்பாலான மருத்துவர்கள் யோசனைத் தெரிவித்துள்ளனர். எனவே தமிழக அரசும் இந்த பாணியைப் பின்பற்றலாம் எனவும், ஊரடங்கு மேலும் சில வாரங்கள் நீட்டிக்கப்படலாம் என்றும் தெரிகிறது.

மேலும் படிக்க..

அவசர பயன்பாட்டுக்கு பவுடர் வடிவில் கொரோனா மருந்து! மத்திய அரசு ஒப்புதல்

இவர்களுக்கு ரூ.2,000 கொரோனா நிவாரணம் கிடையாது, தமிழக அரசின் அதிர்ச்சித் தகவல்!

அரிசி அட்டை தாரருக்கு ரூ.4000, பால் விலை குறைப்பு - முத்தான 5 திட்டங்களுக்கு மு.க.ஸ்டாலின் கையெழுத்து!

English Summary: Curfew in Tamil Nadu may be extended for another 14 days ! Published on: 19 May 2021, 09:43 IST

Like this article?

Hey! I am Elavarse Sivakumar. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.