நடப்பு ஆண்டுக்கான வடகிழக்கு பருவமழை சராசரி அளவை ஒட்டியே இருக்கும் என தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் முன்னறிவிப்பு வெளியிட்டுள்ளது.
2020ம் ஆண்டின் வடகிழக்குப் பருவமழைக் (North East Monsoon) காலத்திற்கான (அக்டோபர் மாதம் முதல் டிசம்பர் மாதம் வரை) மழை பற்றிய முன்னறிவிப்பு செய்வதற்காக தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்திலுள்ள (TamilNadu Agricultural University) வேளாண் காலநிலை ஆராய்ச்சி மையம், பயிர் மேலாண்மை இயக்ககத்தில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
இதற்காக ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் பசிபிக் பெருங்கடலில் பூமத்தியரேகையை ஒட்டியுள்ள கடற்பகுதியின் மேற்பரப்பு, நீரின் வெப்பநிலை, தென் மண்டல காற்றழுத்த குறியீடு ஆகியவற்றின் அடிப்படையில், கணிணி கட்டமைப்பைக் கொண்டு 2020ம் ஆண்டிற்கான வடகிழக்குப் பருவமழை முன்னறிவிப்பு பெறப்பட்டது.
சராசரி மழை ( Expecting Average Rain)
இதன்படி அரியலூர், சென்னை, கோயமுத்தூர், கடலூர், தர்மபுரி, திண்டுக்கல், ஈரோடு, கன்னியாகுமரி, கரூர், கிருஷ்ணகிரி, நாகபட்டினம், நாமக்கல், பெரம்பலூர், புதுக்கோட்டை, இராமநாதபுரம், சேலம், சிவகங்கை, தஞ்சாவூர், தேனி, திருவள்ளூர், தூத்துக்குடி, திருநெல்வேலி, திருப்பூர், திருவண்ணாமலை, விழுப்புரம் மற்றும் விருதுநகரில் சராசரி மழை பெய்யக் கூடும்.
சராசரியை விட அதிகம் (Higher than Average)
மாவட்டங்கள் காஞ்சிபுரம், மதுரை, திருவாரூர், திருச்சி மற்றும் வேலூரில் சராசரியை விட அதிக மழை இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. நீலகிரி மாவட்டத்தில் சராசரி மழையளவிற்கு ஒட்டிய மழையளவு எதிர்பார்க்கப்படுகிறது.
விவசாயத்திற்கு சாதகம் (Advantage for agriculture)
ஆகஸ்ட் மற்றும் செம்டம்பர் மாதங்களில் தமிழ்நாட்டின் ஒரு சில பகுதிகளில் சராசரி மழையளவைக் காட்டிலும், அதிக மழை பெறப்பட்டுள்ளதால், மண்ணில் போதுமான அளவு ஈரப்பதம் இருக்கும்.
இதனை பயன்படுத்தி விவசாயிகள் விதைப்பு செய்வதன் மூலம், பயிரின் முதன்மை நீர் தேவையை பூர்த்தி செய்ய முடியும். சராசரி வடகிழக்குப் பருவமழை எதிர்பார்க்கப்படுவதால், தற்போது விதைக்கும் பயிர்கள் நல்ல வளர்ச்சியும் மகசூலும் பெற முடியும்.
மேலும் படிக்க...
இயற்கை சாகுபடிக்கு ஊக்கத்தொகை- காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்ட விவசாயிகளுக்கு அழைப்பு!
தட்கல் விவசாய மின் இணைப்பு - வரும் 21 முதல் அக்.31ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்!
Share your comments