இந்த மாதம் இல்லத்தரசிகளுக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சிக் கொடுக்கும் கெட்டகாலமாகவேத் தொடங்கியிருக்கிறது போலும். ராக்கெட் வேகத்தில் உயர்ந்தது தங்கம் விலை மட்டுமல்ல, சிலிண்டர் விலையும் ரூ.200 வரை உயர உள்ளதாக எண்ணெய் நிறுவன வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. எல்லாவற்றுக்கும் எது காரணம் தெரியுமா? ரஷ்ய அதிபர் புடினின் பிடிவாதத்தால் நடைபெறும் உக்ரைன் மீதான போர்தான்.
உலகையே உலுக்கிக் கொண்டிருக்கும் உக்ரைன் - ரஷ்யா போர் இந்தியாவில் பொருளாதார ரீதியாகப் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதன் எதிரொலியாக ஒருபுறம் கச்சா எண்ணெய் விலையேற்றம், அதன் தொடர்ச்சியாக மற்ற பொருட்கள் விலையேற்றம் என நாட்டு மக்கள் அனைவருமே பெரும் நிதிச்சுமையை எதிர்கொள்ளும் சூழல் உருவாகியுள்ளது.
அந்த வகையில் இந்தியாவில் பெட்ரோல் - டீசல் விலை உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது. ஏற்கெனவே இந்தியாவில் பெட்ரோல் விலை 100 ரூபாயைத் தாண்டி அச்சுறுத்தும் நிலையில், மேலும் விலை உயர்த்தப்பட்டால் அது வாகன ஓட்டிகளுக்கு பெரும் சிரமத்தை ஏற்படுத்தும். பெட்ரோல் விலையைப் பொறுத்தவரை, சுமார் 15 ரூபாய் வரை உயரும் எனத் தெரிகிறது.
ஆண்களை அச்சுறுத்த பெட்ரோல் விலை உயர்வு என்றால், இன்னொரு பக்கம் பெண்களை அச்சுறுத்த சிலிண்டர் விலை உயர்வு. இல்லத்தரசிகளுக்கு கவலை தரும் விதமாக, சமையல் சிலிண்டர் விலையும் அதிரடியாக உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இன்னும் ஓரிரு வாரங்களில் சமையல் சிலிண்டர் விலை உயரும் என்று தெரிகிறது.
ரூ.200 வரை
சிலிண்டர் விலை 100 ரூபாய் முதல் 200 ரூபாய் வரை உயரும் எனவும், மார்ச் மாதம் முடிந்ததும் இந்த விலையேற்றம் அமலுக்கு வரும் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.இயற்கை எரிவாயு, கச்சா எண்ணெய் போன்றவற்றின் விலையேற்றத்தால் எண்ணெய் விநியோக நிறுவனங்களுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது. அதன் தாக்கத்தை பொதுமக்கள் மீது சுமத்தும் வகையில் விலையேற்றம் தொடர்பான அறிவிப்பை நிறுவனங்கள் விரைவில் வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பொதுவாக, ஒவ்வொரு மாதமும் முதல் நாளில் சிலிண்டர் விலை மாற்றியமைக்கப்படும். கடந்த சில மாதங்களாகவே வீட்டு உபயோகத்துக்கான சிலிண்டர் விலை உயர்த்தப்படாமல் இருந்து வருகிறது. ஆனால் ஏப்ரல் 1ஆம் தேதி சிலிண்டர் விலை உயர்த்தப்பட வாய்ப்பு உள்ளது. குறிப்பாக இந்த 5 மாநிலத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகே இந்த விலை ஏற்றத்தை அமலுக்குக் கொண்டுவர வேண்டும் என மோடி அரசு நிர்பந்திருப்பதாகவும் தெரிகிறது.
மேலும் படிக்க...
ரூ.5,100யைத் தாண்டிய ஒரு கிராம் தங்கம் - சவரன் ரூ.41,000!
குழாய் பாசனத்திற்கு ரூ.15,000 மானியம்- ஆதிதிராவிட விவசாயிகளுக்கு அழைப்பு
Share your comments