சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்திற்கு மத்திய அரசு அறிவித்துள்ள தாதா சாகேப் பால்கே விருது , வரும் 25ம் தேதி வழங்கப்படுகிறது.
தாதா சாஹேப் பால்கே விருது
இந்தியாவின் முதல் முழுநீள சினிமாவாகக் கருதப்படும் ராஜா ஹரிச்சந்திரா திரைப்படத்திற்கு திரைக்கதை அமைத்து, தயாரித்து இயக்கியவர் தாதா சாஹேப் பால்கே. இந்திய சினிமாவின் தந்தை என்று கருதப்படும் தண்டிராஜ் கோவிந்த பால்கேவின் பெயரில் வழங்கப்படும் விருது தாதா சாஹேப் பால்கே விருது.
தேசிய திரைப்பட விருது விழா டெல்லியில் வரும் 25-ந் தேதி நடைபெறுகிறது. அந்த விழாவில் நடிகர் ரஜினிகாந்திற்கு தாதா சாகேப் பால்கே விருது வழங்கப்படுகிறது.
51வது நபர் (51st person)
முன்னதாக, இந்திய திரைத்துறையில் சிறந்த பங்களிப்பை வழங்கிய நடிகர் ரஜினிகாந்துக்கு, தாதா சாகேப் பால்கே விருது அறிவிக்கபட்டது.
இதன்மூலம் 51வது தாதா சாஹேப் பால்கே விருதைப் பெறும் பெருமையைப் பெறுகிறார் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்.
இந்திய சினிமாவுக்கு சிறப்பான பங்களிப்பு கொடுத்த 50 பிரபலங்கள் இதுவரை இந்த விருதைப் பெற்றுள்ளனர். இதன்மூலம், இந்த விருதைப் பெறும் 51வது நபர் என்றப் பெருமையை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பெறுகிறார்.
தங்கத் தாமரை பதக்கம் (Gold Lotus Medal)
இந்திய திரைப்படத் துறையில் சாதனையாளர்களுக்கு வழங்கப்படும் மிக உயர்ந்த விருது (Dada Saheb Phalke Award). தங்கத் தாமரை பதக்கமும், 10 லட்சம் ரூபாய் ரொக்கப் பரிசும் கொண்ட இந்தவிருதைப் பெறுகிறார் நடிகர் ரஜினிகாந்த்.
சாதனையாளர் பட்டியல் (Achiever list)
தமிழ் திரையுலகில், நடிகர் சிவாஜிகணேசன், இயக்குநர் சிகரம் கே. பாலச்சந்தர் ஆகியோருக்கு தாதா சாகேப் விருது பெற்ற சாதனையாளர்கள். இந்தப் பட்டியலில் தற்போது இணைகிறார் சூப்பர் ஸ்டார்.
மேலும் படிக்க...
Share your comments