இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் கோவிட் தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 13 ஆயிரத்தை தாண்டியது. கடந்த சில மாதங்களாக குறைந்திருந்த கொரோனா வைரஸ் பரவல், தற்போது மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. மேலும், 18 வயது நிரம்பிய இளம்பெண் ஒருவர் உயிரிழந்து இருப்பது சென்னை மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
கொரோனா வைரஸ் பரவல் (Corona Virus spreading)
கொரோனா வைரஸ் பரவல் தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட புள்ளி விவரத்தில் கூறப்பட்டுள்ளதாவது: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 13,216 பேருக்கு தொற்று உறுதியானது. இதனால், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 43,283,793 ஆனது. கடந்த 24 மணி நேரத்தில், 8,148 பேர் நலமடைந்ததால், வைரஸ் தொற்றில் இருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 4,26,90,845 ஆனது. தற்போது 63,108 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
கோவிட் காரணமாக 23 பேர் மரணமடைந்ததால், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5,24,840 ஆக உயர்ந்தது. இந்தியாவில் இதுவரை 196 கோடி டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டது. கடந்த 24 மணி நேரத்தில் 14,99,824 டோஸ் தடுப்பூசி போடப்பட்டது என அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
மீண்டும் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், பொதுமக்கள் அனைவரும் முககவசத்தை தவறாது அணிய வேண்டும். மேலும், தனிமனித விலகலை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும்.
மேலும் படிக்க
Share your comments