பழைய ஓய்வூதிய திட்டத்தில் கிடைத்த நிலையான ஓய்வூதியமும், பல்வேறு சலுகைகளும் தேசிய பென்சன் திட்டத்தில் கிடைப்பதில்லை என அரசு ஊழியர்கள் கூறுகின்றனர். எனவே, மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என அரசு ஊழியர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
பழைய பென்சன் திட்டம் (OPS)
ஏற்கெனவே ராஜஸ்தான், சத்தீஸ்கர், ஜார்கண்ட், பஞ்சாப் ஆகிய மாநிலங்கள் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்துவதாக அறிவித்துள்ளன. இந்த வரிசையில் தற்போது இமாசலப் பிரதேசமும் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தியுள்ளது. தமிழ்நாட்டிலும் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்ற குரல் வலுப்பெற்று வருகிறது.
ரிசர்வ் வங்கி எச்சரிக்கை
பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்துவதால் ஏற்படும் சேமிப்புகள் குறுகிய கால அடிப்படையிலானது என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. மேலும், இப்போதைய செலவுகளை எதிர்காலத்துக்கு தள்ளிப்போடுவதால், வரும் ஆண்டுகளில் மாநிலங்களுக்கு பென்சன் சுமை அதிகரிக்கும் அபாயம் இருப்பதாகவும் ரிசர்வ் வங்கி எச்சரித்துள்ளது. சில மாநிலங்கள் மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்துவதால் மிகப்பெரிய ஆபத்து ஏற்படும் என ரிசர்வ் வங்கி எச்சரித்துள்ளது.
மத்திய அரசின் நிலைப்பாடு
மத்திய அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்துவதற்கு மத்திய அரசுக்கு திட்டம் இருக்கிறதா என அண்மையில் நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு அரசு அளித்த பதிலில், பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்துவதற்கு எந்த திட்டமும் இல்லை என தெரிவித்துவிட்டது.
மேலும் படிக்க
ATM போனாலே அபராதம் தான்: பொதுமக்களே உஷார்!
மூத்த குடிமக்களுக்கு அதிக பணம் கிடைக்கும் சேமிப்புத் திட்டம் இதோ!
Share your comments