1. செய்திகள்

விஷக்காய்ச்சல் அபாயம்: 5ம் வகுப்பு வரை பள்ளிகளுக்கு விடுமுறையா?

T. Vigneshwaran
T. Vigneshwaran
Danger of flu

புதுச்சேரியில் அதிகரித்து வரும் விஷக் காய்ச்சலை கருத்தில் கொண்டு எல்கேஜியிலிருந்து ஐந்தாம் வகுப்பு வரை அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் பத்து தினங்களுக்கு அரசு விடுமுறை அளிக்க வேண்டும். பெருகி வரும் இந்த விஷக் காய்ச்சல் பாதிக்கப்பட்டவர்கள் கொரோனா டெஸ்ட் எடுத்தால் அவர்களுக்கு பாசிட்டிவ் தான் வருகிறது. கொரோனா தொற்று நோயினால் மக்களுக்கு ஏற்பட்டுள்ள வெறுப்புணர்வால் காய்ச்சல் வந்தாலும் யாரும் முன்பு மாதிரி கொரோனா டெஸ்ட் எடுத்துக் கொள்வதில்லை. இதை சுகாதாரத்துறை கவனத்தில் கொள்ள வேண்டும். விஷக்காய்ச்சல் பரவுவது என்பது இயற்கையான ஒன்று அல்ல என அதிமுக கிழக்கு மாநில செயலாளர் அன்பழகன் கோரிக்கை வைத்துள்ளார்.

புதுச்சேரி கிழக்கு மாநில அதிமுக செயலாளர் அன்பழகன் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில்; புதுச்சேரி மாநிலம் முழுவதும் பெருகிவரும் விஷக்காய்ச்சல் தொற்று நோயினால் மக்கள் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாக்கப்பட்டு வருகின்றனர். கடந்த இரண்டு மாத காலமாக தொடர்ந்து விஷக்காய்ச்சல் போன்று ஒரு நோய் பரவி சளி, இருமல், தொண்டை வலி உடல் முழுவதும் தாங்க முடியாத வலி ஏற்பட்டு மக்கள் பாதிக்கப்படுவது தவிர்க்க முடியாத ஒன்றாக உள்ளது.

இதுவும் கொரோனா காலத்தில் கொரோனா தொற்று நோய் வந்தால் உடல்நிலை எந்த அளவுக்கு பாதிக்கப்படுமோ அந்த அளவுக்கு தற்போதும் பாதிப்பு ஏற்படுகிறது. குறிப்பாக குழந்தைகள் மற்றும் சிறுவர்கள் இந்த விஷக் காய்ச்சலால் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். தொற்றுநோய் போன்று பரவும் இந்த விஷக் காய்ச்சலை கட்டுப்படுத்த அரசு போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்காதது வருத்தம் அளிக்கக்கூடிய விஷயமாகும். குறிப்பாக சுகாதாரத்துறை, உள்ளாட்சித் துறை, பொதுப்பணித்துறை கல் இணைந்து சுகாதாரத்தை பேணி பாதுகாக்க நடவடிக்கை எடுத்து இருக்க வேண்டும்.

உள்ளாட்சித் துறை மூலம் தினசரி வார வேண்டிய குப்பைகள் கூட வாரப்படாமல் இரண்டு, மூன்று நாட்களுக்கு ஒரு முறை வருவதால் நகர் பகுதி முழுவதும் வாரப்படாத குப்பைகள் துர்நாற்றம் வீசுகிறது. பல கழிவு நீர் வாய்க்கால்கள் தூர்வரப்படாததால் ஆங்காங்கே வாய்க்கால் அடைப்பும், உடைப்பும் ஏற்பட்டு வாய்க்காலில் தண்ணீர் தேங்கி நிற்கிறது. பருவ மழை தொடங்கியுள்ள நிலையில் தேங்கி நிற்கும் மழை நீரினால் தொற்று நோய் ஏற்படுவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளது.

மக்களின் உயிர் சம்பந்தமான சுகாதார விஷயத்தில் சம்பந்தப்பட்ட அரசு துறைகள் அலட்சியமாக இருப்பது சரியான முடிவு அல்ல. உடல் நலத்துடன் பள்ளிக்குச் செல்லும் சிறுபிள்ளைகள் வீட்டுக்கு திரும்பும் பொழுது உடல் நலக்குறைவோடு திரும்பி வருகின்றனர். பள்ளி வகுப்பில் மற்ற சிறுவர்களுக்கு இந்த விஷக்காய்ச்சல் இருந்தால் அந்த வகுப்பில் உள்ள அனைத்து பிள்ளைகளுக்கும் விஷக்காச்சல் பரவிக் கொண்டு வருகிறது. நகரின் பகுதிகளில் குழந்தைகளுக்கு மருத்துவம் பார்க்கும் ஒவ்வொரு கிளினிக் எதிரிலும் நூற்றுக்கணக்கான பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளின் சிகிச்சைக்காக வரிசையில் நின்று கொண்டிருப்பது பரிதாபமாக உள்ளது.

மேலும் படிக்க

ரேஷன் அட்டைதாரர்களுக்கு அதிர்ச்சி செய்தி, குடும்ப அட்டைதாரர்களே உஷார்

English Summary: Danger of flu: Holidays for schools up to class 5? Published on: 08 September 2022, 05:50 IST

Like this article?

Hey! I am T. Vigneshwaran. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments

Latest feeds

More News

CopyRight - 2025 Krishi Jagran Media Group. All Rights Reserved.
News Hub