சமீபத்தில் வெளியான சிவில் சர்வீஸ் தேர்வு முடிவுகளில் இந்திய அளவில் 338 ஆவது ரேங்க் எடுத்து யூபிஎஸ்சி தேர்வில் வெற்றி பெற்றிருக்கும் தமிழகத்தை சேர்ந்த டாக்சி ஓட்டுநர் மகள் ஏஞ்சலின் ரெனிட்டாவுக்கு தமிழக காவல்துறை டிஜிபி சைலேந்திரபாபு வாழ்த்து தெரிவித்துள்ளார். தஞ்சாவூர் மாவட்டம், திருக்காட்டுப்பள்ளி அருகே உள்ள மைக்கேல்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் ஏஞ்சலின் ரெனிட்டா. இவரது தந்தை டாக்சி ஓட்டுநராக இருக்கிறார்.
பத்தாம் வகுப்பில் 490 மதிப்பெண்களும், பன்னிரெண்டாம் வகுப்பில் 1158 மதிப்பெண்களும் எடுத்த ஏஞ்சலின் ரெனிட்டா, சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் வேளாண்மை மற்றும் நீர்ப்பாசனத்தில் பொறியியல் படித்தார். கல்லூரி இறுதி ஆண்டு படிக்கும் போதே சிவில் சர்வீஸ் தேர்வில் கலந்து கொள்வதற்கான முயற்சிகளில் ஈடுபட்டார். 2020-ல் சிவில் சர்வீஸ் தேர்வெழுதி தேர்ச்சி பெறவில்லை.
இதை அடுத்து மேலும் தீவிரமாகப் படித்து, மறுபடியும் தேர்வெழுதினார். அதன் பலனாக சமீபத்தில் வெளியான சிவில் சர்வீஸ் தேர்வு முடிவில் இந்திய அளவில் 338 ஆவது ரேங்க் எடுத்து, யூபிஎஸ்சி தேர்வில் வெற்றி பெற்றார்.
தமிழகத்தில் வெற்றி பெற்றுள்ள 27 பேரில் ஏஞ்சலின் ரெனிட்டாவும் ஒருவர். இந்த நிலையில் சிவில் சர்வீஸ் தேர்வில் வெற்றி பெற்ற ஏஞ்சலின் ரெனிட்டாவுக்கு தமிழக காவல்துறை டிஜிபி சைலேந்திரபாபு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
மேலும் படிக்க:
Share your comments