விவசாயிகளின் போராட்டம் காரணமாக பி.எம் கிசான் திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு வழங்கப்படும் உதவித்தொகையான ரூ.2000 விடுவிப்பதில் காலதாமதம் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
விவசாயிகளின் போராட்டம் காரணமாக பி.எம் கிசான் திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு வழங்கப்படும் உதவித்தொகையான ரூ.2000 விடுவிப்பதில் காலதாமதம் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
பி.எம் கிசான் திட்டம் - PM-Kisan scheme
பிரதமரின் கிசான் சம்மான் நிதி யோஜனா திட்டத்தின் (Pradhan Mantri Kisan Samman Nidhi yojana) திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ.6000 என மூன்று தவணைகளில் தலா ரூ.2000 வீதம் வழங்கப்பட்டு வருகிறது. ஏற்கனவே 6 தவணைகள் முடிந்த நிலையில், மத்திய அரசு தனது 7- வது தவணையை இந்த மாதம் வழங்க இருந்தது
2021ம் ஆண்டின் அதிக சம்பளம் வழங்கும் தொழில் துறைகள் - விவரம் உள்ளே!!
ரூ.2000 கிடைப்பதில் தாமதம் ஏன்?
ஆனால் இது வரை விவசாயிகளின் வங்கி கணக்கிற்கு மத்திய அரசின் உதவி தொகை கிடைக்கபெறவில்லை. டிசம்பர் 10 முதல் 15 தேதிக்குள் இந்த தவணை கிடைக்கும் என்று விவசாயிகள் எதிர்பாத்த நிலையில் மேலும் காலதாமதம் ஏற்படும் என்று மத்திய அரசு வட்டராங்கள் தெரிவிக்கின்றன.
விவசாயிகளின் வங்கி கணக்கிற்கு பணம் அனுப்புவதற்கான அனைத்து நடைமுறைகளும் முடிந்துவிட்ட நிலையில் தவணையை ஓரே முறையில் அனுப்ப மேல் அதிகாரிகளின் ஒப்புதலுக்கு காத்திருப்பாக மத்திய வேளாண் அமைச்சக வட்டாரங்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதிய வேளாண் சட்டங்களை எதிர்த்து விவசாயிகள் நடத்திவரும் போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவரும் முயற்சியில் உயர் அதிகாரிகள் ஈடுப்பட்டு வருவதால் உதவித்தொகையை விடுவிப்பதில் காலதாமதம் ஏற்படுவதாக அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது.
குறைந்த விலையில் அடுக்குமாடி வீடு வழங்கும் திட்டம்! 1.50 இலட்சம் மானியம்!
உங்களின் நிலை மற்றும் பட்டியலை கீழே வழங்கப்பட்டுள்ள வழிமுறைகளை பின்பற்றி அறிந்துகொள்ளுங்கள்....
உங்கள் பெயர் மற்றும் கட்டண நிலையை சரிபார்க்க
பட்டியல், விண்ணப்பம் மற்றும் கட்டண நிலைகளில் உங்கள் பெயரைச் சரிபார்க்க கீழே கொடுக்கப்பட்டுள்ள படிகளைப் பின்பற்றவும்
-
முதலில், பிரதமர் கிசான் சம்மன் நிதியின் அதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்குச் செல்லுங்கள் - https://pmkisan.gov.in/.
-
"Dashboard" என்று சொல்லும் இணைப்பைக் கிளிக் செய்க.
-
நீங்கள் அதைக் கிளிக் செய்யும் போது, ஒரு புதிய பக்கம் திறக்கும்.
-
இங்கே நீங்கள் மாநில, மாவட்டம், துணை மாவட்டம் மற்றும் கிராமத்தை நிரப்ப வேண்டும்.
-
பின்னர் "Show" என்பதை கிளிக் செய்க
-
இதன் பின் உங்கள் கிராமத்தில் எத்தனை விவசாயிகள் பதிவு செய்யப்பட்டுள்ளனர், எத்தனை தவணைகளைப் பெறுகிறார்கள் அல்லது யாருடைய விண்ணப்பம்
-
நிராகரிக்கப்பட்டது போன்ற அனைத்து தகவல்களையும் நீங்கள் பெறுவீர்கள்.
-
கட்டண நிலையை நீங்கள் காண விரும்பினால், Payment Status. என்பதைக் கிளிக் செய்க, இங்கே நீங்கள் முழுமையான பட்டியலைப் பெறுவீர்கள்.
நேரடியாக பட்டியலை சரிபார்க்க..Click here
ஒரே முதலீட்டில் மாதந்தோறும் ரூ.4000/- பென்சன் பெற்றிடுங்கள்!
Share your comments