மத்திய அரசாங்கத்துக்கு நிதி ஆயோக் எப்படி பல கொள்கைகளுக்கு வழிகாட்டுகிறதோ, அப்படி தமிழக அரசுக்கு உறுதுணையாக இருப்பது மாநில திட்டக்குழுவாகும்.
இது முதல்-அமைச்சரின் தலைமையில் செயல்படும் ஒரு உயர்மட்ட ஆலோசனை குழுவாகும். இந்த குழு தமிழக அரசால் செயல்படுத்தப்பட்டுவரும் முன்னோடி மக்கள் நலத்திட்டங்களமதிப்பீடு செய்து அறிக்கையாக அரசிடம் தாக்கல் செய்கிறது. இதன்மூலம் நிறைவேற்றி செயல்படுத்தும் திட்டங்கள் மக்களுக்கு போய் சென்றடைந்துள்ளதா? உரிய பலன் கிடைத்துள்ளதா? அந்த திட்டத்தில் ஏதேனும் மாற்றங்கள் செய்யவேண்டியது இருக்கிறதா? என்பதை அரசு தெரிந்துகொள்ளமுடியும்.
இதுபோல ஏதேனும் புதிய கொள்கை முடிவுகளை அரசு எடுக்கவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதா? என்பதையும் திட்டக்குழு நன்கு ஆராய்ந்து அறிக்கையாக அரசிடம் வழங்குகிறது. பொதுவாக திட்டக்குழுவின் ஆய்வுகளும், பரிந்துரைகளும் அரசுக்கு மிகுந்த நன்மை பயப்பதாக இருக்கிறது. தற்போது தமிழக திட்டக்குழுவின் தலைவராக முதல்-அமைச்சர் மு.கஸ்டாலினும், துணை தலைவராக ஜெயரஞ்சனும், உறுப்பினர்-செயலராக இந்திய வனப்பணி அதிகாரி சுதா மற்றும் உறுப்பினர்களும் பணியாற்றுகிறார்கள். இந்த குழு கடந்த வாரம்
திங்கட்கிழமையன்று தமிழ்நாட்டில் ஊரக பகுதிகளில் வேளாண்மை சாராத வேலைவாய்ப்புகள், நீடித்த வளர்ச்சி இலக்குகள் 2030-நீடித்த வளர்ச்சி இலக்குகளுக்கான தமிழ்நாட்டில் ஊரக பகுதிகளில் வேளாண்மை சாராத வேலைவாய்ப்புகள், நீடித்த வளர்ச்சி இலக்குகள் 2030-நீடித்த வளர்ச்சி இலக்குகளுக்கான தமிழ்நாட்டின் தொலைநோக்கு ஆவணம்,தமிழ்நாட்டில் வாகன உற்பத்தி துறையின் எதிர்காலம், தமிழ்நாட்டை அறிவுசார் பொருளாதாரத்தை நோக்கி-வடிவமைக்கும் பாதை என்ற தலைப்புகளின் கீழ் 4 அறிக்கைகளை தாக்கல் செய்தது.
இதில் முதல் அறிக்கை தமிழ்நாட்டில் வேளாண் தொடர்பான நிலையை அப்படியே படம் பிடித்துக்காட்டியது. தமிழ்நாட்டில் 2012 முதல் 2024 வரையிலான காலக்கட்டத்தில் உள்ள விவசாய நிலை ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இந்த 12 ஆண்டுகளில் தமிழ்நாட்டில் விவசாயத்தை சார்ந்து இருந்த மக்கள்தொகை 40 சதவீதத்தில் இருந்து 20 சதவீதமாமாக குறைந்துவிட்டது. அதாவது விவசாயத்தை சார்ந்து இருந்த 20 சதவீத மக்கள் விவசாயம் அல்லாத வேறு வேலைகளுக்கு மாறிவிட்டனர்.
Share your comments