கொரோனா, இந்த வார்த்தையே நம் அனைவரின் வாழ்க்கையை புரட்டி போட செய்தது. முன்பு 144 அவ்வப்போது, ஓரிரு பகுதியில் பாதுகாப்பு காரணமாக போடப்பட்டிருக்கும். ஆனால் நாடு முழுவதும் 144, முழு ஊரடங்கு உத்தரவு, அப்பபா இந்த வார்த்தைகளை கேட்கவே சற்று பயமாக தான் உள்ளது. இந்நிலையில் டெல்மைக்ரான் என்ற புதிய வில்லன் 2022இல் வருகை தர உள்ளாராம். இது என்ன? வாருங்கள் தெரிந்துக்கொள்ளலாம்.
கொரோனாவின் தாக்கத்திலிருந்து வெளியே வருவதற்குள் டெல்டா வருகை தந்தார், அவரிடம் இருந்து மீள்வதற்குள் ஒமைக்ரான் வருகை தந்தார், தற்போது டெல்மைக்ரான் வர இருப்பதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.
அமேரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் கொரோனா பரவல் அதிகரித்து வரவதற்கு டெல்மைக்ரான் வகை கொரோனா பரவி வருவதே காரணம் என்று கூறப்படுகிறது.
இது என்ன டெல்மைக்ரான் என்று புரிந்துக்கொள்ள அதிக சிரமப்பட வேண்டாம். உருமாறிய டெல்டா மற்றும் ஒமைக்ரான் வகை கொரோனா வைரஸ்களின் கூட்டுச் சேர்க்கையே டெல்மைக்ரான். இது ஒமைக்கரானை விட அதிதீவிரமாகப் பரவும் தன்மை கொண்டிருக்கிறது.
இது குறித்து மகாராஷ்டிரா மாநில கொரோனா சிறப்பு குழுவைச் சேர்ந்த மருத்துவர் ஷஷாங்க் ஜோஷி கூறுகையில், டெல்மைக்ரான் டெல்டா மற்றும் ஒமைக்ரானின் கூட்டுச்சேர்கையாக உள்ளது என குறிப்பிட்டார். இதன் காரணமாக ஐரோப்பிய மற்றும் அமெரிக்க நாடுகளில் கொரோனா சுனாமி ஏற்பட்டுள்ளது எனவும் தெரிவித்தார்.
இதுவரை கொரோனா வைரஸ்களால் ஏற்பட்டு வந்த அலைகளையே உலகம் தாங்க முடியாமல் அவதிப்பட்டு வந்த நிலையில், டெல்மைக்ரானால் சுனாமி ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது, 2022ஆம் ஆண்டின் மீதான சிறுதுளி நம்பிக்கையையும் தகர்த்தேறிந்துள்ளது.
டெல்டா வகை கொரோனா நாட்டில் பவலாக பரவியிருந்த நிலையில், தற்போது உலகம் முழுக்க ஒமைக்ரான் அதிகளவில் பரவி வருகிறது.
ஒமைரான் தொற்று முதல்முறையாக தென்னாப்ரிக்காவில் கண்டறியப்பட்டது. இது பல மடங்கு உருமாற்றம் அடைந்த கொரோனா வைரஸாகவும், இது அதிதீவிரமாக பரவும் தன்மை கொண்டிருப்பதாகவும் கூறப்பட்டது. ஒமைக்ரான் பாதித்தவர்களில் பலி எண்ணிக்கையும் குறைவாகவே இருந்த்து.
ஆனால், தற்போது டெல்டா மற்றும் ஒமைக்ரானின் கூட்டுச்சேர்கையான டெல்மைக்ரான் இரண்டு வைரஸ்களின் அமைப்பையும் ஒருங்கே பெற்றுள்ளது.
இதையடுத்து, தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்களுக்கு உடனடியாக தடுப்பூசி செலுத்துவதிலும், இரண்டு தவணை தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு கூடுதல் தவணைகளை செலுத்தவும் நாடுகள் சிந்திக்க வேண்டும் என்று உலக சுகாதார தலைவர் டெட்ரோஸ் அதானோம் வலியுறுத்தியுள்ளார்.
ஒமைக்ரான் பாதிப்பில் இந்தியாவின் நிலை? (India's position on omega-3 impact?)
இந்தியாவில் ஒமைக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 358 ஆக அதிகரித்துள்ளது. அதிகபட்சமாக மகாராஷ்டிர மாநிலத்தில் 88 பேரும், தில்லியில் 67பேரும், தெலுங்கானாவில் 38 பேரும் ஒமைக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அதனைத் தொடர்ந்து தமிழகத்தில் 34 பேரும், கர்நாடகத்தில் 31 பேரும், குஜராத்தில் 30பேரும், கேரளத்தில் 27 பேரும், ராஜஸ்தானில் 22பேரும் ஒமைக்ரானால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலை நீடித்தால் கொரோனா போல் ஒமைக்ரானும் பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் படிக்க:
Share your comments