வங்கக்கடலில் அடுத்தடுத்து உருவான நிவர் மற்றும் புரெவி (Burevi and nivar) புயல் காரணமக தமிழகத்தில் தொடரும் கனமழை. டெல்டா மாவட்டங்களில் (Delta districts) பெய்து வரும் மழை காரணமாக பல பகுதிகள் வெள்ளத்தில் மிதக்கின்றன
வங்க கடலில் உருவாகி அதிதீவிர புயலாக மாறிய நிவர் புயல் (Cyclone Nivar) சென்னை அருகே கரையை கடந்தது. இதனால் தமிழகத்தின் கடலோர மாவட்டங்களிலும், வடமாவட்டங்களிலும் கனமழை கொட்டித் தீர்த்தது. இதைத்தொடர்ந்து வங்கக்கடலிலு மீண்டும் ஒரு புயல் புரெவி (Burevi Cyclone) உருவாகி வலுவிழந்த புயலாக மாறி தென் தமிழகத்தில் கரையை கடந்தது.
இதன் காரணமாக தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. குறிப்பாக கடலூர், ராமேஸ்வரம் மற்றும் காவிரி டெல்டா மாவட்டங்களில் கனமழை கொட்டித் தீர்த்தது. மன்னார்வளைகுடா பகுதியில் தொடர்ந்து காற்றழுத்த தாழ்வு மண்டலம் நீடித்து வருவதால், மழையின் தீவிரம் ஓய்ந்து விடவில்லை. கடலூர் மாவட்டத்தில் விடிய, விடிய பரவலாக மழை பெய்தது.
வெள்ளத்தில் மிதக்கும் கடலூர்
இதனால் கடலூர் மாவட்டமே வெள்ளக்காடாக மாறியுள்ளது. குறிப்பாக சிதம்பரம், காட்டுமன்னார்கோவில், பரங்கிப்பேட்டை மற்றும் குறிஞ்சிப்பாடி, கடலூர் நகரம் ஆகிய பகுதிகளில் திரும்பும் இடமெல்லாம் தண்ணீர் தேங்கியுள்ளது. குடியிருப்புகள் அனைத்தும் வெள்ளத்தில் மிதக்கின்றன. பல பகுதிகளில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து 4-வது நாளாக கொட்டிய மழையால் மக்கள் வீடுகளிலேயே முடங்கி கிடக்கின்றனர். வெள்ளம் சூழ்ந்த குடியிருப்பு பகுதியில் மக்கள் அத்தியாவசிய பொருட்கள் கிடைக்காமல் இன்னலுக்கு உள்ளாகி வருகிறார்கள்.
தமிழகத்தில் கனமழை நீடிப்பு! மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம்!
இருளிலிருந்து மீண்ட ராமேஸ்வரம்
தொடர் மழையால் ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் பகுதியும் வெள்ளத்தில் மூழ்க்கியுள்ளது. இதேபோல் பாம்பன், தங்கச்சிமடம் பகுதியிலும் சில நாட்களாக நீடித்த கடல்சீற்றம் சற்று தணிந்துள்ளது. மின்சாரம் தடைப்பட்டு ராமேசுவரம் பகுதி முழுவதும் இருளில் மூழ்கியது. இந்தநிலையில் சனிக்கிழமை பழுது சரிபார்க்கப்பட்டு, மின் விநியோகம் வழங்கப்பட்டது.
டெல்டா மாவட்டங்களில் பயிர்கள் சேதம்
புரெவி புயலால் பெய்த கனமழை காரணமாக காவிரி டெல்டா மாவட்டங்களான தஞ்சை, நாகை, திருவாரூர் மாவட்டங்களில் அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்களில் தண்ணீர் தேங்கி உள்ளது. சில இடங்களில் நெற்பயிர்கள் அழுகி காணப்படுகின்றன. இதுவரை 3 லட்சம் மேற்பட்ட ஏக்கர் வயல்களில் நீர் தேங்கி காணப்படுகின்றன.
மேலும் படிக்க...
சர்க்கரை குடும்ப அட்டைதார்கள் அரிசி அட்டையாக மாற்றக்கொள்ள வாய்ப்பு- தமிழக அரசு உத்தரவு!
நிவர் & புரெவி புயலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கும், ஆடு, மாடுகளுக்கும் நிதியுதவி - முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!!
Share your comments