அசல் கொரோனா வைரசை விட இரண்டரை மடங்கு வேகமாக பரவக்கூடியது டெல்டா வகை வைரஸ். இந்தியாவில் கோவிட் 2வது அலையின்போது கடுமையான பாதிப்புகளை டெல்டா வைரஸ் தான் ஏற்படுத்தியது. அமெரிக்கா, இங்கிலாந்து, ரஷ்யா, தென்னாப்பிரிக்கா உள்ளிட்ட 96 நாடுகளில் டெல்டா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
WHO எச்சரிக்கை
இன்னும் பல நாடுகளில் டெல்டா வைரஸ் பாதிப்பு உள்ளது. ஆனால் உறுதி செய்யப்படவில்லை. அதையும் சேர்த்தால் டெல்டா வைரசால் பாதிக்கப்பட்ட நாடுகள் 100ஐ தாண்டும். டெல்டா வைரசின் பரவக்கூடிய தன்மை அதிகரித்து வருகிறது. இதை கருத்தில் கொள்ளும்போது, உலகளவில் வரும் மாதங்களில் டெல்டா வைரசின் தாக்கம் கடுமையாக இருக்கும்; மற்ற வகை வைரஸ்களை மிஞ்சும் வகையில் பாதிப்பு இருக்கும் என, உலக சுகாதார அமைப்பு (WHO) எச்சரிக்கை விடுத்துள்ளது.
டெல்டா ப்ளஸ் வைரஸ்
வேகமாகப் பரவக்கூடிய உருமாறிய கொரோனா வைரசான டெல்டா பிளஸ் வைரசால் (Delta Plus Virus) பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை, இந்தியாவில் அதிகரித்து வருகிறது. மகாராஷ்டிரா, கேரளா, மத்தியபிரதேசம் மாநிலங்களில் டெல்டா பிளஸ் வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதுவரை 40க்கு மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆபத்தான டெல்டா ப்ளஸ் வைரஸ் பரவாமல் தடுக்க நடவடிக்கைகளை எடுக்கும்படி மாநில அரசுகளை மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. இந்நிலையில் தமிழகத்தில், முதலாவதாக சென்னையை சேர்ந்த ஒருவருக்கு டெல்டா பிளஸ் வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
ஆயிரத்துக்கும் அதிகமான மாதிரிகளை பரிசோதனை செய்ததில் ஒருவருக்கு இந்த வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.
மேலும் படிக்க
கொரோனா வைரஸின் அடுத்தடுத்த அலைகளுக்கு தேதி நிர்ணயிக்க வேண்டாம்: கொரோனா தடுப்பு படை தலைவர்!
SBI-யில் நாளை அமலாகிறது புதிய சேவைக் கட்டணம்!
Share your comments