1. செய்திகள்

111 நாடுகளில் டெல்டா வைரஸ்:வேகமாகப் பரவும் ஆபத்து!

Elavarse Sivakumar
Elavarse Sivakumar
Credit :The Quint

உலகில் 111 நாடுகளில் தற்போது பரவியுள்ள டெல்டா வகை வைரஸ் பிற பகுதிகளுக்கும் வேகமாக பரவும் ஆபத்து உள்ளதாக உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது.

கொரோனா 2-வது அலை (Corona 2nd wave)

இந்தியா உள்ளிட்ட உலக நாடுகளில் கொரோனா 2-வது அலை கோரத்தாண்டவம் ஆடி வருகிறது. நாள்தோறும் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையும், பலியாவோரின் எண்ணிக்கையும் அதிகரித்துக்கொண்டே வருகிறது. இதையடுத்துத் தொற்று மேலும் பரவாமல் தடுக்க அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.

இந்நிலையில் டெல்டா பிளஸ் வைரஸ் தொற்றின் வாராந்திர புள்ளிவிபர பட்டியலை உலக சுகாதார அமைப்பு வெளியிட்டுள்ளது. அதில் இடம்பெற்றிருப்பதாவது:

வீரிய டெல்டா வைரஸ் (Active delta virus)

உலகில் 111 நாடுகளில் அதிக வீரியமுள்ள டெல்டா வைரஸ் பரவியுள்ளது. டெல்டா, ஆல்பா, காமா, பேட்டா என நான்கு வகை உருமாறிய வைரஸ்களில் மிக விரைவாக பரவும் ஆற்றல் டெல்டாவுக்குத் தான் உள்ளது.

வைரஸ் பரவும்அபாயம் (Risk of spreading the virus)

இதனால் வரும் நாட்களில் மேலும் பல நாடுகளில் டெல்டா வைரஸ் பரவும் அபாயம் உள்ளது. இதனால் சுகாதார வசதிகளை மேம்படுத்த வேண்டிய நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

நெருக்கடி (Crisis)

குறிப்பாக மிகக் குறைவாகத் தடுப்பூசி செலுத்தியுள்ள நாடுகள் சுகாதார வசதிகளை உருவாக்குவதில் அதிக நெருக்கடியை சந்திக்க நேரிடும் அபாயமும் உள்ளது.

பலவித வைரஸ்கள் (Various viruses)

உலகில் 178 நாடுகளில் ஆல்பா வைரஸ் காணப்படுகிறது. பேட்டா காமா வைரஸ்கள் முறையே 123 மற்றும் 75 நாடுகளில் பரவியுள்ளன. பல நாடுகளில் தொற்று நோய் கண்காணிப்பு பரிசோதனை உள்ளிட்ட வசதிகள் குறைவாக உள்ளன. அதனால் எப்போது எந்த வகை கொரோனா வைரஸ் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை உறுதிப்படுத்த முடியவில்லை.

செயல்திட்டம் அவசியம் (The project is essential)

தற்போது சர்வதேச போக்குவரத்து அதிகரிக்கத் துவங்கியுள்ளதால் நோய் தாக்கம் மற்றும் தீர்வுகளுக்கான செயல் திட்டங்களை வகுப்பது அவசியம். உலகில் 300 கோடி பேருக்குக் குறைந்தபட்சம் ஒரு 'டோஸ்' தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இது மொத்த மக்கள் தொகையில் 24.7 சதவீதம் தான்.

டெல்டா வைரஸ்தான்

கோவாக்ஸ் திட்டத்தின் கீழ் ஏழை மற்றும் நடுத்தர வருவாய் நாடுகளுக்கான தடுப்பூசி விநியோகத்தை அதிகரிக்கச் செய்யத் தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
பல நாடுகளில் கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு அதிகரித்து இருப்பதற்கு காரணம், டெல்டா வைரஸ்தான்.

அதிகரிக்கும் ஆபத்து (Increased risk)

டெல்டா வைரஸ், கணிசமாக அதிகரிக்கும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது. வரும் மாதங்களில் உலகளவில் ஆதிக்கம் செலுத்தும் வைரசாக இருக்கும்.

பாதிப்பு அதிகரிக்கும் (The vulnerability will increase)

  • டெல்டா வகை வரைஸ் மாறுபாடுகளுடன் அதிகரித்த பரிமாற்ற தன்மை, சுகாதார அமைப்புகளில் அதிக அழுத்தத்தை ஏற்படுத்தும்.

  • குறிப்பாகத் தடுப்பூசிக் குறைவாகப் போடப்பட்டுள்ள நாடுகளில் இந்த வைரஸால் ஏற்படக்கூடிய பாதிப்பு அதிகமாக இருக்கும்.

  • கவலைக்குரிய வைரஸ்களில் டெல்டா வகை வைரஸ்கள்தான் அதிகமாகப் பரவுகிற தன்மையைக் கொண்டுள்ளன.

  • இதனால்தான் வரும் மாதங்களில் இந்த வைரஸ் உலகளவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும்.

கொரோனா தடுப்பூசி (Corona vaccine)

பொது சுகாதாரம் மற்றும் சமூக நடவடிக்கைகளில் தளர்வு மற்றும் கொரோனா காலத்திற்கான பொருத்தமான நடத்தைகளை பின்பற்றாமை மற்றும் மக்கள் நடமாட்டம் அதிகரித்தல், தடுப்பூசிகளைக் கலந்து போடுதல், தடுப்பூசியைப் போட்டுக்கொள்ளும் மக்கள் தொகை குறைவு ஆகியவற்றால் மேலும் பரவல் அதிகரிக்கிறது.

இதனால் மருத்துவமனைகளில் நோயாளிகள் சேர்க்கை, இறப்பு பல நாடுகளில் அதிகரித்துள்ளது. 11ம் தேதியுடன் முடிந்த வாரத்தில் உலகளவில் புதிதாக 30 லட்சம் பேருக்கு கொரோனா பாதிப்பு பதிவாகி உள்ளது. முந்தைய வாரத்துடன் ஒப்பிடுகையில் இது 10 சதவீதம் அதிகரிப்பு ஆகும்.

4 லட்சம்பேர் (4 lakhs)

உலகளவில் தினமும் 4 லட்சம் பேர் புதிதாக கொரோனா பாதிப்புக்குக்கு ஆளாகிறார்கள். முந்தைய வாரத்தில் இது 3.70 லட்சமாக இருந்தது. இதுவரை உலகம் முழுவதும் 18 கோடியே 60 லட்சம் பேருக்குத் தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க...

அரசு தரும் ரேஷன் பொருட்களை வாங்குவதில் சிரமமா? இதை செய்யுங்கள்

வேளாண்,உணவுத்துறை அமைச்சர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டலின் அதிரடி உத்தரவு!!

English Summary: Delta virus in 111 countries: risk of rapid spread! Published on: 15 July 2021, 08:12 IST

Like this article?

Hey! I am Elavarse Sivakumar. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.