வங்கக்கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், புதுச்சேரிக்கு வடக்கே இன்று மாலை கரையைக் கடக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதுகுறித்து வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் நள்ளிரவில் செய்தியாளர்களிடம் பேசினார்.
கரையைக் கடக்கிறது
அப்போது அவர் கூறியதாவது:-
தெற்கு வங்க கடலின் மத்திய பகுதியில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது. இது சென்னைக்குக் கிழக்கு, தென்கிழக்கே 430 கிலோ மீட்டர் தொலைவிலும், புதுச்சேரிக்கு கிழக்கு தென்கிழக்கே 420 கிலோ மீட்டர் தொலைவிலும் மையம் கொண்டு உள்ளது. இது மேலும் வடமேற்கு திசையில் நகர்ந்து காரைக்காலுக்கும் ஸ்ரீஹரிகோட்டாவுக்கும் இடைப்பட்ட பகுதியில், புதுச்சேரிக்கு வடக்கே இன்று மாலை கரையைக் கடக்கக் கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அதி வேகத்தில் காற்று
காற்றழுத்த தாழ்வு மண்டலம் கரையை கடக்கும் போது கடலில் 60-70 கிலோ மீட்டர் வேகத்திலும், கரை பகுதியில் அதிகபட்சமாக 30 கிலோ மீட்டர் வேகத்திலும் காற்று வீசக்கூடும். எனவே, காற்றினால் பாதிப்பு அதிகம் இருக்காது, மழை தான் அதிக அளவில் கிடைக்கும்.
மீட்புப் பணிகள்
இன்றும் (வியாழக்கிழமை) எதிர்பார்க்கப்படும் கடுமையான மழைக்கு முன்னதாக IMD சிவப்பு எச்சரிக்கையை விடுத்துள்ள நிலையில், மாநிலம் முழுவதும் வெள்ள மீட்புப் பணிகளை தொடர்ந்து தமிழக அரசு கவனித்து வருகிறது.
அடுத்த 6 மணி நேரம் (The next 6 hours)
தென்மேற்கு வங்கக் கடலில் காற்றழுத்தத் தாழ்வு நிலை காரணமாக வட தமிழகக் கடலோரப் பகுதியான சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 6 மணி நேரத்தில் 40 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும்.
மேலும் படிக்க...
அதிதீவிரக் காற்றழுத்த தாழ்வுப் பகுதி 11-ந்தேதி சென்னையை நெருங்கும்: மிக மிக பலத்த மழை எச்சரிக்கை!
2015 ஆம் ஆண்டுக்குப் பிறகு மீண்டும் சென்னையில் 20 செ.மீ. மழை!
Share your comments