மத்திய மேற்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டிய இந்திய கடல் பகுதியில் நிலவிய மேலடுக்கு சுழற்சியானது தற்பொழுது காற்றழுத்த தாழ்வு பகுதியாக உருவாகியிருப்பதால், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த இரண்டு நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
பலத்த மழைக்கு வாய்ப்பு (Heavy Rain)
இதுதொடர்பாக இன்று வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி அடுத்த 24 மணி நேரத்தில் மேற்கு வடமேற்கு திசையில் ஆந்திராவை நோக்கி நகரக்கூடும். இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக வட தமிழகம் மற்றும் புதுச்சேரியின் இரண்டு நாட்களுக்கு லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நீலகிரி, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, சேலம் கிருஷ்ணகிரி,தர்மபுரி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.
வானம் மேகமூட்டம் (Cloudy)
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
மழை அளவு (Maximum Rain)
நீலகிரி மாவட்டத்தில் அவலாஞ்சி, கீழ் கோத்தகிரி எஸ்டேன், கோவை மாவட்டத்தின் வால்பாறை ஆகிய இடங்களில் தலா 5 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது.
மீனவர்களுக்கு எச்சரிக்கை (Weather forecast)
இன்றும், நாளையும், வட தென்மேற்கு மற்றும் மத்திய மேற்கு வங்க கடலை ஒட்டியுள்ள தமிழகம் மற்றும் ஆந்திராக் கடலோரப் பகுதிகளில், சூறாவளி காற்று 45 முதல்-55 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.
இன்று முதல் 15ம் தேதி வரை, தென் கிழக்கு மற்றும் மத்தியக் கிழக்கு அரபிக் கடலை ஒட்டியுள்ள கேரளா, கர்நாடக கடலோரப் பகுதிகள் மற்றும் லட்சத்தீவில் பலத்த காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோமீட்டர் வேகத்தில் வீச வாய்ப்பு உள்ளது.
இன்று முதல் 17ம் தேதிவரை தென்மேற்கு அரபிக்கடல் பகுதிகளில் பலத்த காற்று 45 முதல் 55 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.மீனவர்கள் மேற்கண்ட பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென அறிவுறுத்தப்படுகிறார்கள். கடல் உயர்அலை முன்னறிவிப்பு
தென் தமிழக கடலோர பகுதிகளில் குளச்சல் முதல் தனுஷ்கோடி வரை, 14.09.2020 இரவு 11.30 எழுப்பக்கூடும் மணி வரை கடல்அலை 3 முதல் 3.3 மீட்டர் வரை எழும்பக்கூடும்
இதனிடையே தென்மேற்கு பருவமழை மீண்டும் தீவிரமடைந்துள்ளதால் ஆந்திரா, தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் பரவலாக பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேலும் படிக்க...
பார்த்தீனியம் செடியில் இருந்து பலவித உரங்கள்- தயாரிப்பது எப்படி?
மானிய விலையில் நெல் விதைகள் - வாங்கிப் பயனடைய உடுமலை விவசாயிகளுக்கு அழைப்பு!
Share your comments