1. செய்திகள்

மீண்டும் இணைய தனுஷ்- ஐஸ்வர்யா முடிவு? விவாகரத்து முடிவு வாபஸ்!

Elavarse Sivakumar
Elavarse Sivakumar
Dhanush-Aishwarya Reunion Final? Divorce decision withdrawn!

நடிகர் தனுஷ், ஐஸ்வர்யா ரஜினிகாந்த் ஆகியோர் மீண்டும் இணைய முடிவு செய்திருப்பதாகத் தெரிகிறது. முன்னதாக இந்த ஆண்டு தொடக்கத்தில், அதாவது ஜனவரி மாதம் இருவரும் பிரிவாக அறிவித்தனர்.

முத்திரை பதித்தவர்

தமிழ் சினிமாவில், இளம் வயதில் அறிமுகமாகி தற்போது வரை, பல ஆண்டுகளாக ரசிகர்களை தன்வசம் வைத்திருப்பவர் நடிகர் தனுஷ். வித்தியாசமான கதாப்பாத்திரங்களைத் தேர்வு செய்ததுடன், இளசுகளின் நாடித்துடிப்பை அறிந்துகொண்டு அதற்கு ஏற்ப தன் நடிப்பை வெளிப்படுத்தி வருவது இவரது சிறப்பு அம்சம்.

18 ஆண்டுகள்

இதன் மூலம் முன்னணி நடிகரான தனுஷ் நடிகர் ரஜினிகாந்தின் மகள் ஐஸ்வர்யாவை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். இதனிடையே கடந்த ஜனவரி மாதம் தனுஷ் ஐஸ்வர்யா இருவரும் தங்கள் 18 ஆண்டுகால திருமண வாழக்கையில் இருந்து விலக உள்ளதாக அறிவித்தனர்.

அதிர்ச்சி

இந்த அறிவிப்பு ரஜினி மற்றும் தனுஷ் ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், இவர்களுக்காக இல்லை என்றாலும் இவர்களின் குழந்தைகளுக்காக மட்டுமாவது சேர்ந்து வாழ வேண்டும் என்று ரசிகர்கள் தரப்பில் கோரிக்கை எழுந்தது. அதே சமயம் திரையுலகை சேர்ந்த பலரும் இவர்கள் இருவருக்கும் இடையே சமரசம் செய்யும் முயற்சியில் ஈடுபட்டனர்.

நீதிமன்றத்தில் விசாரணை

இதனைத் தொடர்ந்து தனுஷ் ஐஸ்வர்யா இருவருக்கும் இடையேயான விவாகரத்து மனு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. இதனிடையே கணவன் மனைவி இருவரும் தங்களுக்குள் இருக்கும் கருத்து வேறுபாட்டை பேசி தீர்த்துக்கொள்ளலாம் என்ற முடிவுக்கு வந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சமரசப் பேச்சு

இது தொடர்பாக ரஜினி மற்றும் தனுஷ் தரப்பினர் நடத்திய பேச்சு வார்த்தையில் சுமூக முடிவு எட்டப்பட்டு இருப்பதாகவும், இதனால் தனுஷ் ஐஸ்வர்யா இருவரும் சேர்ந்து வாழும் மனநிலைக்கு வந்துவிட்டதாகவும் கூறப்படுகிறது. இந்த செய்தி தனுஷ் மற்றும் ரஜினி ரசிகர்களிடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தனுஷ் நடிப்பில் சமீபத்தில் வெளியான திருச்சிற்றம்பலம், மற்றும் நானே வருவேன் படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், தற்போது அவர், கேப்டன் மில்லர் மற்றும் வாத்தி என்ற படத்தில் நடித்து வருகிறார். தனுஷ் ஐஸ்வர்யாவை கடந்த 2004-ம் ஆண்டு திருமணம் செய்துகொண்டது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க...

ரேஷன் கடைகளில் சிலிண்டர் விற்பனை- தமிழக அரசு அதிரடி!

18 மாத அகவிலைப்படி நிலுவைத் தொகை எப்போது கிடைக்கும்?

English Summary: Dhanush-Aishwarya Reunion Final? Divorce decision withdrawn! Published on: 05 October 2022, 07:18 IST

Like this article?

Hey! I am Elavarse Sivakumar. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2025 Krishi Jagran Media Group. All Rights Reserved.