நாடு முழுவதும் பாரத ஸ்டேட் வங்கி உள்ளிட்ட 9 வங்கிகள் மூலம் இன்று (நவம்பர் 1) டிஜிட்டல் நாணயம் அறிமுகம் செய்யப்பட உள்ளதாக ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. நாம் தினசரி பயன்படுத்தும் பணம் என்பது பேப்பர் வடிவிலும் உலோக நாணய வடிவிலும் உள்ளது. இதே போல டிஜிட்டல் கோட்கள் (Digital Code) மூலம் உருவாக்கப்படுவது டிஜிட்டல் நாணயங்கள் அல்லது டிஜிட்டல் கரன்சி என்று கூறப்படுகிறது.
டிஜிட்டல் நாணயங்கள் (Digital Currency)
டிஜிட்டல் கரன்சியை அரசாங்கம் மட்டுமின்றி தனியார் நிறுவனங்களும் தயாரித்து வருகின்றன. காகித பணத்திற்கு சமமாக இந்த டிஜிட்டல் பணமும் மதிக்கப்படும். இந்த டிஜிட்டல் நாணயத்தை ஒரு சில நாடுகள் மட்டும் அங்கீகரித்துள்ளன. இந்தியாவில் 2022-23ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், ரூபாய்க்கு இணையான டிஜிட்டல் நாணயங்களை ரிசர்வ் வங்கி வெளியிடும் என அறிவித்திருந்தார். அதன்படி, நாடு முழுவதும் சோதனை முறையில் டிஜிட்டல் நாணயங்களை இன்று அறிமுகப்படுத்த உள்ளதாக ரிசர்வ் வங்கி தெரிவித்தது.
பாரத ஸ்டேட் வங்கி, பேங்க் ஆப் பரோடா, யூனியன் பேங்க் ஆப் இந்தியா, எச்.டி.எப்.சி வங்கி, ஐசிஐசிஐ வங்கி, கோடக் மகேந்திரா வங்கி, யெஸ் வங்கி, ஐ.டி.எப்.சி பர்ஸ்ட் வங்கி, எச்.எஸ்.பி.சி வங்கி ஆகிய 9 வங்கிகள் மூலம் டிஜிட்டல் நாணயம் அறிமுகம் செய்யப்படுகிறது.
அடுத்த ஒரு மாதத்திற்குள் முழு பயன்பாட்டிற்கு வரும் எனவும், அரசு பத்திரங்கள், பங்கு சந்தை பரிவர்த்தனை பயன்பாட்டிற்கு இந்த டிஜிட்டல் நாணயம் பயன்படுத்தலாம் என்றும் ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
மேலும் படிக்க
பழைய பென்சன் திட்டத்தில் புதிய பிரச்சனை: அச்சத்தில் அரசு ஊழியர்கள்!
லாபத்தை கொட்டும் LIC இன் அருமையான முதலீட்டு திட்டம்: 500 ரூபாய் போதும்!
Share your comments