இரண்டு கோடியே 15 லட்சம் ரேசன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு விநியோகம் இன்று (04-01-2022) முதல் தொடங்கியது. 20 பொருட்கள் அடங்கிய தொகுப்புடன் கரும்பு சேர்த்து 21 பொருட்களாக வழங்கப்படுகிறது. இந்த நிலையில், விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு, கரும்புகளை விவசாயிகளிடம் இருந்து நேரடியாக கொள்முதல் செய்ய, தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. இதற்கான தெளிவான வழிமுறைகளையும் தமிழ்நாடு அரசு தற்போது வெளியிட்டுள்ளது.
அதன்படி, பன்னீர் கரும்பு மட்டுமே கொள்முதல் செய்யப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது. கொள்முதல் செய்யப்படும் முழு கரும்பின் விலை அதிகபட்சம் 33 ரூபாயாக இருக்க வேண்டும் என்றும், கரும்பின் உயரம் 6 அடிக்கு குறையாமல் இருக்கவேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டிருப்பது குறிப்பிடதக்கது.
அந்தந்த மாவட்டங்களில் விளையும் கரும்பினை கொள்முதல் செய்வதற்கு, முன்னுரிமை அளிக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் விவசாயிகள் தரப்பிலிருந்து, எந்தவிதமான புகார்களுக்கும் இடமளிக்கக் கூடாது எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த வருடம் கரும்பு கொள்முதல் அதிகரிக்கப்பட்டுள்ளதால், அதற்கேற்றவாறு விவசாயிகளிடம் கடந்த ஆண்டு கொள்முதல் செய்யப்பட்ட விலையைவிட கூடுதகாக விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு ஒரு கட்டு கரும்பு, ரூ. 340க்கு கொள்முதல் செய்யப்பட்டது. இந்த கட்டில் 20 கரும்புகள் இருக்கும் என்பது குறிப்பிடதக்கது. 2022ஆம் கரும்பு கொள்முதலுக்கு அரசு நிர்ணயிருத்திருக்கும் விலை ரூ.360 ஆகும், இதிலும் 20 கரும்புகள் இடம்பெறும். மேலும் விவசாயிகள் வாகன கூலியின்றி கூடுதல் லாபம் கிடைப்பதால் அரசுக்கு நன்றி தெரிவிக்கின்றனர். மேலும் விவசாயிகள் மகிழ்ச்சி வெள்ளத்தில் உள்ளனர்.
கரும்பு கொள்முதல் செய்யும்போது அந்தந்த மாவட்ட விவசாயிகளிடமிருந்து, நேரடியாகவோ அல்லது 10% வேளான் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கம் மூலமாகவோ மட்டுமே கொள்முதல் செய்யப்பட வேண்டும். மேலும் எக்காரணம் கொண்டும் இடைத்தரகர்கள் அனுமதிக்கப்படக் கூடாது, கொள்முதல் செய்யப்பட்ட கரும்புக்கான விலை விவசாயிகளுக்கு உடனுக்குடன் வழங்கப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே தமிழ்நாடு அரசின், இந்த முடிவுக்கு கரும்பு விவசாயிகளிடையே நல்ல வரவேற்பு உள்ளது. விவசாயிகளுக்கு, இம்முறை பொங்கலுக்கு நல்ல விளைச்சலும், அதற்கேற்ப கிடைக்கும் லாபமும் என இரட்டிப்பு மகிழ்ச்சி.
மேலும் படிக்க:
5 நாட்களில் குணமாகிறதா ஒமிக்ரான்? ஆனால் எச்சரிக்கை மிக முக்கியம்!
Share your comments