1. செய்திகள்

தேங்காய் விலை சரிவதால் அதிருப்தி: மாற்றி யோசிக்க அரசுக்கு நெருக்கடி

T. Vigneshwaran
T. Vigneshwaran
Coconut price

விவசாயிகளிடம் இருந்து, தேங்காயை நேரடியாக கொள்முதல் செய்ய வேண்டும், ரேஷன் கடைகளில் பாமாயிலுக்கு பதிலாக, தேங்காய் எண்ணெய் வினியோகிக்க வேண்டும், என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை அரசின் கவனத்துக்கு கொண்டு செல்ல, பொள்ளாச்சியில், ஜூலை 13ல் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்த, தமிழ்நாடு மாநில தென்னை உற்பத்தியாளர் நிறுவனங்களின் நட்பமைப்பு கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது.

தேங்காய்க்கு விலை கிடைக்காததால், தென்னை விவசாயிகள் படும் துயரத்தை, அரசின் கவனத்துக்கு கொண்டு செல்வது குறித்து, மாநில தென்னை உற்பத்தியாளர் நிறுவனங்களின் நட்பமைப்பின் கூட்டம், பொள்ளாச்சியில் நடந்தது.

சங்கத்தின் தலைவர் சக்திவேல் தலைமை வகித்தார். நிர்வாகிகள் பத்மநாபன், கிருஷ்ணசாமி, தென்னிந்திய தென்னை சாகுபடியாளர் சங்கத் தலைவர் தாத்துார் கிருஷ்ணசாமி, தென்னை வளர்ச்சி வாரிய உறுப்பினர் முத்துராமலிங்கம், மடத்துக்குளம் தென்னை உற்பத்தியாளர் நிறுவனம் ஜெய்மணி மற்றும் பலர் பங்கேற்று பேசினர்.

தென்னை விவசாயிகள் கூறியதாவது

வேளாண் துறைக்கு தனி பட்ஜெட் அறிக்கையை விவசாயிகளுக்காக முழு ஈடுபட்டோடு செயல்படுத்தும் முதல்வர், தென்னை விவசாயிகள் சந்திக்கும் இன்னல்களை களைய வேண்டும். பொள்ளாச்சியில் இருந்து தினமும், வெளிமாவட்டங்கள் மற்றும் வெளிமாநிலங்களுக்கு, உணவு தேவைக்காகவும், மதிப்புக்கூட்டு பொருளாக மாற்றவும், தினமும், 6 கோடி ரூபாய்க்கு தேங்காய் வர்த்தகம் நடக்கும். தற்போது, தினமும் இரண்டு கோடி ரூபாய்க்கு மட்டுமே வர்த்தகம் நடக்கிறது.

விலை சரிவு ஏற்பட்டுள்ளதால், விவசாயிகள் தேங்காயை இருப்பு வைக்கின்றனர். அதிக நாட்களுக்கு இருப்பு வைத்தாலும் பாதிப்பு ஏற்படும். தேங்காய் விலை வீழ்ச்சி அடைந்து வருவதால், தென்னை விவசாயிகளின் நலன் காக்கும் வகையில், தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.கொப்பரை தயாரிப்பதில் பருவமழைக்காலம் மற்றும் சிறு, குறு விவசாயிகளின் பொருளாதார சிக்கல்களால், கொப்பரையை உற்பத்தி செய்ய இயலவில்லை.

விவசாயிகளிடம் இருந்து, நேரடி நெல் கொள்முதல் செய்வது போன்று, தேங்காயை நேரடியாக கொள்முதல் செய்ய அரசு முன்வர வேண்டும். அனைத்து விவசாயிகளிடம் இருந்து, தேங்காய் கிலோ, 40 ரூபாய்க்கு கொள்முதல் செய்ய வேண்டும்.

தேங்காய் விலை வீழ்ச்சியை தடுக்க, அரசு கொப்பரை கொள்முதல் துவங்கப்பட்டுள்ளது. அந்த மையங்களில், 105.90 ரூபாய்க்கு கொள்முதல் செய்ய அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. ஆனால், நடைமுறையில் முழுமையாக அனைத்து தென்னை விவசாயிகளும் பயன்பெற இயலவில்லை.

மேலும் படிக்க

LPG சிலிண்டருக்கு 200 ரூபாய் மானியம் கிடைக்குமா! கிடைக்காதா?

English Summary: Dissatisfaction due to fall in coconut prices: Crisis for the government to rethink Published on: 30 June 2022, 06:31 IST

Like this article?

Hey! I am T. Vigneshwaran. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.