2021 ஜனவரி 11 வரை, 16,17,979 விவசாயிகளுக்கு பயனளிக்கும் வகையில் ரூ 24,399.63 கோடி மதிப்புள்ள 83,41,536 பருத்தி பேல்கள் கொள்முதல் செய்யப்பட்டுள்ளன. காரீப் சந்தைப் பருவம் 2020-21 ஆண்டிற்கான குறைந்தபட்ச ஆதரவு விலையில் (The minimum support price) விளைபொருட்கள் கொள்முதல் விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.
நெல் கொள்முதல்:
பஞ்சாப், ஹரியாணா, உத்தரப் பிரதேசம், தமிழ்நாடு, உத்தரகாண்ட், தெலங்கானா, சண்டிகர், ஜம்மு காஷ்மீர், குஜராத், ஆந்திரப் பிரதேசம், ஒடிசா, மகாராஷ்டிரா, மத்தியப் பிரதேசம், பிகார், சத்திஸ்கர், கேரளா, மேற்கு வங்கம், அசாம், கர்நாடகா மற்றும் ஜார்கண்டில் நெல் கொள்முதல் (Paddy purchase) சுமுகமாக நடந்து வருகிறது. இங்கு 2021 ஜனவரி 11 வரை 541.11 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. கடந்தாண்டு இதே காலத்தில் செய்யப்பட்ட 429.20 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதலோடு ஒப்பிடும் போது இது 26.07 சதவீதம் அதிகமாகும். மேலும், மாநிலங்கள் வேண்டுகோள்படி, தமிழ்நாடு, கர்நாடகா, மகாராஷ்டிரா, தெலங்கானா, குஜராத், ஹரியானா, உத்தரப் பிரதேசம், ஒடிசா, ராஜஸ்தான் மற்றும் ஆந்திரப் பிரதேசத்திலிருந்து 51.66 லட்சம் மெட்ரிக் டன் பருப்பு மற்றும் எண்ணெய் வித்துக்களை, ஆதரவு விலையில் கொள்முதல் செய்யவும் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.
பருத்தி கொள்முதல்:
கர்நாடகா, தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில் இருந்து 5,089 லட்சம் மெட்ரிக் டன் கொப்பரை தேங்காய் (Copra coconut) கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. 2021 ஜனவரி 11 வரை, 16,17,979 விவசாயிகளுக்கு பயனளிக்கும் வகையில் ரூ 24,399.63 கோடி மதிப்புள்ள 83,41,536 பருத்தி பேல்கள் (Cotton bales) கொள்முதல் செய்யப்பட்டுள்ளன. இதன் மூலம் பருத்தி விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். வருடந்தோறும் சரியான நேரத்தில் குறைந்தபட்ச ஆதரவு விலையில் பொருத்திக் கொள்முதல் நடைபெறுவதால், எந்தவித இழப்பும் இன்றி சுமுகமாக முடிகிறது.
Krishi Jagran
ரா.வ. பாலகிருஷ்ணன்
மேலும் படிக்க
இரயில்வேவுடன் பிஸ்னஸ் செய்ய ஆசையா?அருமையான வாய்ப்பு!
மக்காச்சோள கொள்முதல் நிலையம் திறக்க விவசாயிகள் வலியுறுத்தல்!
Share your comments