தீபாவளிக்கு சொந்த ஊர் செல்லும் பயணிகள் வசதிக்காக, சென்னை மற்றும் தாம்பரத்தில் இருந்து திருநெல்வேலி, ராமேஸ்வரம் மற்றும் திருச்சிக்கு மூன்று சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன.
இது தொடர்பாக தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிவிப்பில், திருச்சியில் இருந்து நாளை பிற்பகல் 2.15 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில், விருத்தாசலம், விழுப்புரம், செங்கல்பட்டு வழியாக நாளை இரவு ஏழு மணிக்கு தாம்பரம் வந்தடைகிறது.
மறுமார்க்கத்தில் சென்னை தாம்பரத்தில் இருந்து வரும் 27ம் தேதி இரவு ஒன்பது மணி 40 நிமிடங்களுக்கு திருச்சிக்கு புறப்படும் சிறப்பு ரயில், 28ம் தேதி அதிகாலை 3 மணிக்கு திருச்சி சென்றடையும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல தாம்பரத்தில் இருந்து நாளை இரவு 10.20 மணிக்கு புறப்படும் ரயில் விழுப்புரம், திருச்சி, மதுரை வழியாக திருநெல்வேலிக்கு ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணிக்கு சென்றடையும்.
மறுமார்க்கத்தில் வரும் 26ம் தேதி மாலை ஐந்து ஐம்பது மணியளவில் திருநெல்வேலியில் இருந்து புறப்படும் சிறப்பு ரயில், விருதுநகர், விருத்தாசலம் வழியாக 27ம் தேதி அதிகாலை 4 மணியளவில் தாம்பரம் வந்தடையும் எனக் கூறப்பட்டுள்ளது.
மேலும் சென்னை சென்ட்ரலில் இருந்து ஞாயிறன்று இரவு எட்டு 45 மணிக்கு புறப்படும் ரயில், எழும்பூர், விழுப்புரம், கடலூர், சிவகங்கை வழியாக தீபாவளியான திங்கள்கிழமை காலை 11 மணிக்கு ராமேஸ்வரம் சென்றடைகிறது.
மறுமார்க்கத்தில் திங்களன்று மாலை 4 மணி 20 நிமிடங்களுக்கு ராமேஸ்வரத்தில் இருந்து கிளம்பும் ரயில் 25ம் தேதி காலை 6 மணி 20 நிமிடங்களுக்கு தாம்பரம் வந்தடைகிறது.
மேலும் படிக்க
Share your comments