உலக அளவில் அதிகமாக சாகுபடி செய்யும் பழங்களில் வாழை பழமும் ஒன்று. அதே போன்று பெரும்பாலான மக்களால் அதிகம் விரும்பி உண்ணப்படும் பழமாகவும் இருந்து வருகிறது. பருவ நிலை மாற்றத்தால் இந்தியாவின் உற்பத்தி குறைவதற்கான சாத்திய கூறுகள் இருப்பதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.
வாழையை பொறுத்தவரை உடலுக்கு தேவையான அனைத்து சத்துக்களையும் ஒருங்கே தருவதால் தவிர்க்க முடியாத உணவாகவும், அதே சமயத்தில் பெருபாலானவருக்கு அதிக வருமானத்தை தரும் தொழிலாகவும் இருந்து வருகிறது.
கிராமம், நகர்ப்புறம் என அனைத்து தர மக்களாலும் விரும்பி உண்ணப்படுவதியால் இந்தியா மட்டும் அல்லாது உலக சந்தையில் வாழை பழத்திற்கு என்று தனி இடமுண்டு. 27 நாடுகளில் தவிர்க்க முடியாத காலை உணவாகவும் இருந்து வருகிறது. 1961 பிறகு வாழை சாகுபடியானது அபாரமாக இருந்து வந்தது.
உலகின் மிகப் பெரிய உற்பத்தியாளர்கள் மற்றும் ஏற்றுமதியாளர்கள் கூறுகையில் பருவ நிலை மாற்றம் வாழை உற்பத்தியினை பெருமளவில் பாதித்து வருகிறது. இந்நிலை தொடருமானால் 2050 க்குள் வாழை இவ்வுலகை விட்டு சென்று விடும் என்னும் அதிர்ச்சி தகவலை தெரிவித்துள்ளனர்.
பருவநிலை மாற்றத்தை கருத்தை கொண்டு தக்க நடவெடிக்கையை விரைவில் எடுக்க வேண்டுமென ஆர்வலர்கள் கூறி வருகின்றனர்.
Anitha Jegadeesan
Krishi Jagran
Share your comments