1. செய்திகள்

தஞ்சாவூர் நெட்டி கலையின் சிறப்புகள் தெரியுமா?

T. Vigneshwaran
T. Vigneshwaran
Thanjavur Handicraft

தஞ்சை மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் குளத்தில் வளரும் நெட்டி எனப்படும் தண்டை எடுத்து அதிலும் கலை பொருட்களை ஆயிரம் ஆண்டுகளுக்கு மேல் பாரம்பரியமுறையில் தஞ்சை மக்களால் செய்யப்பட்டு வருகிறது.‌ இந்த நெட்டி செய்முறை பற்றிய முழு தகவலையும் இச்செய்தி தொகுப்பில் காணலாம்.

நெட்டி என்றால் என்ன?

தஞ்சாவூர் நெட்டி என்பது தண்ணீரில் விளையும் ஒரு வித செடி வகையைச் சேர்ந்தது. தஞ்சாவூர் மாவட்டங்களில் உள்ள ஏரி , குளம் போன்றவற்றில் விளைகிறது. இதனுடைய நடுபாகம் தாமரை தண்டு போன்று நீளமாகவும், மேல்பகுதி சிறு சிறு கிளைகளாகவும் இருக்கும்.

இந்த நெட்டி டிசம்பர் முதல் பிப்ரவரி மாதங்கள் வரை கிடைக்கும். இந்த நெட்டியைப் பறித்து வெயிலில் உலர்த்தி, பதப்படுத்தி அதில் கைவினைப்பொருட்கள், பரிசுப் பொருட்கள் செய்யப்படுகிறது.

புவிசார் குறியீடு பெற்ற நெட்டி :

தமிழ்நாட்டில் உள்ள பாரம்பரிய சிறப்புமிக்க கைவினைப் பொருட்களை புவிசார் குறியீட்டு பதிவகத்தில் பதிவு செய்ய தமிழ்நாடு கைவினைப் பொருட்கள் மேம்பாட்டுக் கழகமான பூம்புகார் நிறுவனம் சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர் ப.சஞ்சய்காந்தியை நியமித்தது.

இதையடுத்து பூம்புகார் சார்பில் கடந்த 2013-ம் ஆண்டு இந்த நெட்டி வேலைபாடு புவிசார் குறியீடுக்காக விண்ணப்பிக்கப்பட்டு, 2014-ம் ஆண்டு டெல்லியில் ஏழு நபர்களைக் கொண்ட புவிசார் குறியீடு வல்லுநர் குழு முன்பாக சஞ்சய்காந்தி ஆஜராகி வாதாடினார்.

இதன் தொடர்ச்சியாக பல்வேறு சட்டப்பணிகளை மேற்கொண்டு கடந்த 2020 ஜனவரி 10-ம் தேதி அரசிதழில் வெளியிடப்பட்டு தற்போது மத்திய அரசின் புவிசார் குறியீடு கான அங்கீகாரம் கிடைக்கப்பெற்றுள்ளது.

தனிச்சிறப்பு :

வேறு எந்த ஒரு பொருள்களையும் சேர்க்காமல் முழுவதும் நெட்டியை மற்றும் வைத்து செய்யப்படும், இந்த கலை பொருளானது எத்தனை ஆண்டுகள் ஆனாலும் அதன் வெண்மை தன்மை மாறாது.

மேலும் படிக்க:

விவசாயிகளே! கடவுள் வழிபாட்டுக்கு உகந்த 5 மலர்கள்

பொங்கல் பரிசு எப்போது? முதலவர் முடிவு என்ன?

English Summary: Do you know the specialties of Thanjavur neti art? Published on: 22 December 2022, 07:50 IST

Like this article?

Hey! I am T. Vigneshwaran. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2025 Krishi Jagran Media Group. All Rights Reserved.