அரசு தற்போது அனைத்து சேவைகளையும் எளிமையாக்கி வருகிறது. இணையதளத்தின் மூலமாக குடிமக்கள் அடையாள அட்டை, ஆதார் அட்டை, போன்றவற்றில் எளிதில் திருத்தங்கள் செய்து கொள்ள வழி வகை செய்து வருகிறது. அந்த வகையில் தற்போது வாக்காளர் அடையாள அட்டையில் திருத்தங்கள் மற்றும் மாற்றங்களை சுயமாக வாக்காளர்களே செய்து கொள்ளும் புதிய முறையை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
செப்டம்பர் 1 முதல் வாக்காளர்களே தங்களது சுய விவரங்களில் உள்ள தவறுகள், மாற்றங்கள் போன்றவற்றை தாங்களே திருத்தம் செய்து கொள்ளலாம். ஒவ்வொரு வாக்காளரும் தனது பெயர், பிறந்த தேதி, புகைப்படம், முகவரி ஆகியவற்றில் மாற்றம் செய்யவேண்டும் எனில், அவர்களாகவே தேர்தல் ஆணைய இணையதளத்திற்கு சென்று https://nvsp.in/ மாற்றம் செய்து கொள்ளலாம். வாக்காளர்கள் EPIC எண்ணைக் கொடுத்து உள்ளே செல்ல வேண்டும். பின்னர் எந்தத் தகவலை மாற்ற வேண்டுமோ அதனுடைய அசல் சான்றிதழை ஸ்கேன் செய்து பதிவேற்ற வேண்டும்.
NVSP என்னும் புதிய செயலி மற்றும் இணையதள சேவையை உருவாக்கி உள்ளது. இதில் உங்களது வாக்காளர் அடையாள எண்ணை உள்ளீடு செய்து தேவையான திருத்தங்களை மேற்கொள்ளலாம். தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும். ஆதார் அட்டை, ஓட்டுநர் உரிமம், ரேஷன் கார்டு, நிரந்தர முகவரி என ஏதேனும் ஒன்றை சமர்ப்பிக்க வேண்டும்.
இ- சேவை மையங்களில் சென்றும் வாக்காளர்கள் ரூ.1.18 தொகை செலுத்தி விவரங்களைச் சரிசெய்து கொள்ளலாம். இணையம் அல்லது செயலி மூலம் செய்யப்படும் மாற்றங்களை வாக்கு சாவடி அலுவலர் நேரில் சென்று ஆய்வு நடத்தி மாற்றங்களை உறுதி செய்த பின் திருத்தங்கள் செய்யப் படும்.
திட்டம் செயல்படும் தேதி - செப்டம்பர் 1 - 30
வரைவு வாக்காளர் அடையாள அட்டை - அக்டோபர் - 15
திருத்தங்கள் நடைபெறும் சமயம் - அக்டோபர் 15 - நவம்பர் 30
சிறப்பு முகாம்கள் நடைபெறும் நாள் - நவம்பர் 2,3, 9, 10
இறுதி பட்டியல் வெளியீடு - ஜனவரி 1 - 15
Anitha Jegadeesan
Krishi Jagran
Share your comments