கொரோனாவால் பாதிக்கப்பட்டோருக்கு சிகிச்சை அளிக்கும் டாக்டர், நர்ஸ் உள்ளிட்ட சுகாதாரத்துறையினர் பலரும், மன அழுத்தம் (Stress), மனச்சோர்வு உள்ளிட்ட பிரச்னைகளால் பாதிக்கப்படுகின்றனர்.
இதற்கு தீர்வு காண, பல்வேறு டாக்டர்கள் மற்றும் உளவியல் நிபுணர்கள் சங்கத்தினருடன் இணைந்து, பல்வேறு நாடுகளில் வசிக்கும் இந்திய டாக்டர்கள் சங்கம், 'ஹெல்ப் லைன்' (Help Line) உருவாக்கி உள்ளது.
உதவி மையம்
இது குறித்து அந்த சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கை: கொரோனா இரண்டாவது அலை, டாக்டர், நர்ஸ் உட்பட சுகாதார பணிகளில் ஈடுபட்டுள்ளோரை கடுமையாக பாதித்துள்ளது. அவர்கள் கடும் மன உளைச்சலை அனுபவிக்கின்றனர். அவர்களின் பிரச்னைகளுக்கு தீர்வு காண, பல்வேறு மருத்துவ சங்கங்களுடன் இணைந்து, ஒரு உதவி மையம் அமைக்கப்பட்டுள்ளது. மன உளைச்சலால் பாதிக்கப்படுவோர், இந்த உதவி மையத்தில் உள்ள மனநல மருத்துவர்களை தொடர்பு கொண்டு, தங்கள் மன நெருக்கடிக்கு தீர்வு (Solution) காணலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
அர்ப்பணிப்பு
கொரோனா வைரஸ் தொற்றிலிருந்தது மக்களைக் காப்பாற்ற, மருத்துவர்கள் முதல் துப்புரவு பணியாளர்கள் வரை அர்ப்பணிப்போடு செயல்பட்டு வருகின்றனர். அவர்களின் மன உளைச்சலை தீர்க்க தற்போது உதவி மையம் அமைத்திருப்பது, மருத்துவர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றது.
விளை பொருட்களை இருப்பு வைத்து, ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் விவசாயிகள் பொருளீட்டு கடன் பெறலாம்
கொரோனா தொற்றால் குழந்தைகளுக்கு பாதிப்பு மிகக்குறைவு: ஆய்வில் தகவல்!
Share your comments