இந்தியாவில் கொரோனா இரண்டாவது அலை (Corona Second Wave) வேகமாக பரவி வருகிறது. இதனைத் தடுக்க நாடு முழுவதும் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து, கொரோனாத் தொற்றை பரவ விடாமல் தடுத்து வருகின்றனர். இந்நிலையில், கொரோனா பாதித்த நோயாளிகளுக்கு விரைவாகவும், எளிதாகவும் ஆலோசனை வழங்க வாட்ஸ்அப் குழுவை உருவாக்கி உதவி வருகிறார்கள் மருத்துவர்கள்.
வாட்ஸ்அப் குழு
தமிழகம் முழுதும் உள்ள டாக்டர்கள், தமிழினி கோவிட்19 டீம், வாட்ஸ் ஆப் குழுவை (Whatsapp Group) ஏற்படுத்தி, கொரோனா நோயாளிகளுக்கு ஆலோசனை வழங்கி வருகின்றனர்.
தமிழகம் முழுதும் உள்ள 70க்கும் மேற்பட்ட டாக்டர்கள் இதில் இணைந்துள்ளனர். கொரோனா தொற்று நோயாளிகள், 97866 05092 எண்ணுக்கு பரிசோதனை விபரங்களை அனுப்பினால், டாக்டர்கள் அவர்களுக்கான ஆலோசனைகளை பதிவு செய்கின்றனர்.
ஆலோசனை
குழுவின் அட்மின் டாக்டர் சுபாஷ்காந்தி கூறியதாவது: கோவிட்19-க்கான அறிகுறிகள் (Symptoms) குறித்த விபரம், ரத்தக் கொதிப்பு, சர்க்கரை நோய் போன்ற இணை நோய்களால் பாதிப்பு, மனநல ஆலோசனை, கர்ப்பிணி பெண்கள், குழந்தைகள் உள்ளிட்டோருக்கு ஆலோசனை வழங்க இந்தக் குழு உருவாக்கப்பட்டுள்ளது.
விருப்பமுள்ளவர்கள் 97866 05092 என்ற வாட்ஸ் அப் எண்ணுக்கோ அல்லது thamilinipulanam@gmail.com என்ற இ-மெயில் முகவரிக்கோ தொடர்பு கொண்டால், தேவையான ஆலோசனை அனுப்பி வைக்கப்படும். எவ்வித கட்டணமும் கிடையாது.
மேலும் படிக்க
விற்க முடியாமல் கொடியிலேயே அழுகும் கிர்ணி பழங்கள்! இழப்பீடு வழங்க விவசாயிகள் கோரிக்கை
கொரோனா வைரஸால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு ரூ.10 லட்சம் நிவாரணம் - பிரதமர் அறிவிப்பு
Share your comments