கடந்த சில தினங்களாக ஆச்சி மசாலா தூளில் கலப்படம் செய்யப்பட்டுள்ளதாக செய்தி வெளியாகியதற்கு அந்நிறுவனம் மறுப்பு தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளது.
தமிழகத்தில் பல்வேறு மசாலா பொருட்கள் விற்பனை செய்து வருகிறது. அதில் ஆச்சி மசாலா தமிழகம் மட்டுமல்லாது மற்ற மாநிலங்களிலும், வெளிநாடுகளிலும் முத்திரை பாதித்துள்ளது. மசாலா விற்பனையில் முன்னனி வகிக்கும் அந்த நிறுவனத்தின் மீது அண்டை மாநிலமான கேரளாவில் தடை விதித்துள்ளதாக தகவல் வெளியானது.
உடலுக்கு கேடு விளைவிக்கும் பூச்சி கொல்லி கலந்திருப்பதாகவும், அதனால் ஆச்சி தயாரிப்புகள் தடை செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகின.மறுப்பு தெரிவிக்கும் வகையில் ஆச்சி மசாலா நிறுவனம் செய்தி வெளியீட்டு உள்ளது.
ஆச்சி தரப்பில் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் ஆச்சி மசாலா பல்வேறு தரக்கட்டுப்பாடு செய்த பின்பு சந்தைக்கு அனுப்ப படுவதாக கூறினார். மசாலா பொருட்களின் இயற்கை குணங்கள் மாறாமல் முறைப்படி தயாரித்து விற்பனை செய்து வருகிறோம். அதனால் வதந்தியினை நம்ப வேண்டாம் எனவும், தொடர்ந்து மக்கள் பயன்படுத்தலாம் எனவும் அந்நிறுவனம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
Anitha Jegadeesan
Krishi Jagran
Share your comments