கோவிட் தடுப்பூசிகளால் பெரும்பாலானோருக்கு பக்க விளைவுகள் எதுவும் ஏற்படவில்லை என்பது ஆய்வில் தெரிய வந்துள்ளது.
தடுப்பூசி சிறப்பு முகாம்கள்
இந்தியாவில் கோவிட் பெருந்தொற்று பரவலைக் கட்டுப்படுத்த, தடுப்பூசி சிறப்பு முகாம்கள் கடந்த ஜனவரி 16ம் தேதி தொடங்கப்பட்டன. சீரம் நிறுவனம் தயாரித்த கோவிஷீல்ட், பாரத் பயோடெக் நிறுவனம் தயாரித்த கோவாக்சின் ஆகிய இரு தடுப்பூசிகளும் (Vaccine) பொதுமக்களுக்கு செலுத்தப்பட்டன. இவ்விரு தடுப்பூசிகளினால் ஏற்படும் பக்க விளைவுகள் குறித்து சமூக ஊடக தளம் ஒன்று, நாட்டில் 381 மாவட்டங்களில் 40,000 பேரிடம் அண்மையில் கள ஆய்வு மேற்கொண்டது.
ஆய்வு முடிவு
இந்தியாவில் கோவிஷீல்ட் முதல் தவணை செலுத்திக் கொண்ட 70 சதவீதம் பேருக்கும், கோவாக்சின் முதல் தவணை செலுத்திக் கொண்ட 64 சதவீதம் பேருக்கும் எந்தப் பக்க விளைவுகளும் ஏற்படவில்லை. அதுபோல கோவிஷீல்ட் இரண்டாம் தவணைத் தடுப்பூசி செலுத்திக் கொண்ட 75 சதவீதம் பேருக்கும், கோவாக்சின் இரண்டாம் தவணை செலுத்திக் கொண்ட 78 சதவீதம் பேருக்கும் எந்தப் பக்கவிளைவுகளும் ஏற்படவில்லை.
கோவிஷீல்ட் (Covisheild) முதல் தவணைத் தடுப்பூசி செலுத்திக் கொண்ட 30 சதவீதம் பேருக்கு பக்க விளைவுகள் ஏற்பட்டிருக்கின்றன. அதில் 29 சதவீதம் பேருக்கு காய்ச்சலும், ஒரு சதவீதம் பேருக்கு கோவிட் தொற்றும் ஏற்பட்டுள்ளன. கோவாக்சின் (Covaxine) முதல் தவணை தடுப்பூசி செலுத்திக் கொண்ட 30 சதவீதம் பேருக்கு காய்ச்சலும், அதில் ஒரு சதவீதம் பேருக்கு காய்ச்சல் மட்டுமின்றி தீவிர உடல்நிலை பாதிப்பும் ஏற்பட்டிருக்கின்றன. எனினும் மீண்டும் தொற்று ஏற்படவில்லை.
Also Read : இந்தியாவில் கொரோனா 'எண்டமிக்' நிலையில் உள்ளதா? WHO விஞ்ஞானி விளக்கம்!
அதேபோல் கோவிஷீல்ட் இரண்டாம் தவணைத் தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களில் 20 சதவீதம் பேருக்கு காய்ச்சலும், 4 சதவீதம் பேருக்கு தடுப்பூசிக்குப் பின் தொற்றும், ஒரு சதவீதம் பேருக்கு காய்ச்சல் மட்டுமின்றி தீவிர உடல்நிலை பாதிப்பும் ஏற்பட்டிருக்கின்றன. கோவாக்சின் இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களில் 17 சதவீதம் பேருக்கு காய்ச்சலும், 2 சதவீதம் பேருக்கு தொற்றும், 3 சதவீதம் பேருக்கு காய்ச்சல் மட்டுமின்றி தீவிர உடல்நிலை பாதிப்பும் ஏற்பட்டு இருக்கிறது.
Read More
கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்களுக்கு உடற்பயிற்சி ஆலோசனைகள்!
Share your comments