கொரோனா ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட நாளில் இருந்து பல்வேறு நிறுவனங்கள் தங்களது ஊழியர்களை வீட்டில் இருந்தே பணியாற்ற (Work From Home) அறிவுறுத்தி வருகிறது. மேலும் பலர் பணியிழந்து வேலையில்லா நிலை உருவானது. ஏனையோர் வீட்டில் இருந்தே பணியாற்றுவதற்கான வாய்ப்பை தொடர்ந்து தேடி வருகின்றனர். வாட்ஸ்அப் (Whatsapp) மூலம் எப்படி பணம் சம்பாதிப்பது என்பதற்கான வழிமுறைகளை பார்ப்போம்.
பணம் சம்பாதிக்க தேவையானவை:
வாட்ஸ்அப் மூலம் பணம் ஈட்டுவதற்கு ஸ்மார்ட்போன், வாட்ஸ்அப் செயலி இணைய சேவையுடன், ஜிமெயில் கணக்கு (Gmail) மற்றும் பல வாட்ஸ்அப் குரூப்பில் இருத்தல் சிறப்பு ஆகியவையாகும்.
ஆன்லைன் நிறுவனம்:
அமேசான், பிளிப்கார்ட், ஸ்னாப்டீல்
வாட்ஸ்அப்பில் அஃப்பிலேட் மார்கெட்டிங் (Affilate Marketing) வழியாக பணம் சம்பாதிக்கலாம். இதன்மூலம் அமேசான், பிளிப்கார்ட், ஸ்னாப்டீல் ஆகிய ஆன்லைன் தளங்கள் மூலம் பணம் ஈட்டலாம். இதில் அமேசான் உள்ளிட்ட தளங்கள் 10 சதவீதம் வரை கமிஷனை (Commision) வழங்குகிறது என்பது கவனிக்கத்தக்க ஒன்று.
கமிஷன் முறை
ஆன்லைன் விற்பனை தளத்தில் ஏதாவது பொருளை தேர்ந்தெடுத்து இணைப்பு ஒன்றை உருவாக்க வேண்டும். தங்களது ஐடியை அடையாளம் காணும் வகையில் தனித்துவ இணைப்பாக இருக்க வேண்டும். தனிப்பட்ட நபருக்கும், குரூப்பிலும் பகிரலாம் தனிப்பட்ட நபருக்கும், குரூப்பிலும் பகிரலாம். தனித்துவ இணைப்பை உருவாக்கி அதை வாட்ஸ்அப் மூலமாக தங்களது நண்பர்களுக்கு (friends) பகிர வேண்டும். அதோடு இந்த இணைப்பை வாட்ஸ்அப்பில் தனிப்பட்ட தொடர்பு பட்டியலிலும், ஏணைய குரூப்களிலும் அனுப்பலாம். இப்படி அனுப்புவதன் மூலம் கமிஷன் முறையில் பணம் ஈட்டமுடியும்.
Krishi Jagra
ரா.வ. பாலகிருஷ்ணன்
மேலும் படிக்க
ஓய்வுகால வருமானத்தைப் பெற மிகச் சிறந்த 5 முதலீட்டு திட்டங்கள்.!
Share your comments