தற்போது பரவி வரும் 'டெல்டா, ஒமைக்ரான்' வகை கொரோனா வைரஸ்களுக்கு எதிராக, 'கோவாக்சின்' தடுப்பூசியின், 'பூஸ்டர் டோஸ்' மிகச் சிறப்பாக செயல்படுகிறது' என, அதை தயாரிக்கும், 'பாரத் பயோடெக்' நிறுவனம் கூறியுள்ளது.
கொரோனாவுக்கு எதிராக உள்நாட்டு தொழில்நுட்பத்தில், கோவாக்சின் தடுப்பூசியை, தெலுங்கானா மாநிலம் ஐதராபாதைச் சேர்ந்த, பாரத் பயோடெக் நிறுவனம் தயாரித்து வருகிறது.
கோவாக்சின் தடுப்பூசி (Covaxin Vaccine)
தற்போது, 15 வயதுக்கு மேற்பட்டோருக்கு, இரண்டு, 'டோஸ்' வழங்கப்படுகிறது. மேலும், 12 வயதுக்கு மேற்பட்டோருக்கு பயன்படுத்தவும் இந்த தடுப்பூசிக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
தற்போது, டெல்டா மற்றும் ஒமைக்ரான் வகை கொரோனா வைரஸ் பரவல் நம் நாட்டில் தீவிரமாக உள்ளது. இந் நிலையில், இந் நிறுவனத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் டாக்டர் கிருஷ்ண இலா கூறியுள்ளதாவது: ஒருமுறை உருமாறியுள்ள கொரோனா வரைஸ் முதல், பலமுறை உருமாறியுள்ள கொரோனா வைரஸ் வகைகளுக்கு எதிராக, கோவாக்சின் தடுப்பூசி மிகச் சிறப்பாக செயல்படுவது ஆய்வுகளில் தெரியவந்துள்ளது.
இது நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்குவதுடன், நோய் கிருமிகளுக்கு எதிராக போராடும் 'ஆன்டிபாடிஸ் (Antibodies)' எனப்படும் ரத்தம் உருவாக்கும் பொருள் உற்பத்தியை வேகப்படுத்துகிறது.
இரண்டு டோஸ் கொடுக்கப்பட்டவர்களுக்கு, ஆறு மாதங்களுக்குப் பின் மூன்றாவதாக, பூஸ்டர் டோஸ் வழங்குவதன் மூலம், நோய் எதிர்ப்பு சக்தியை மேலும் அதிகரிக்க முடியும் என்பது புதிய ஆய்வில் தெரியவந்துள்ளது.
நோய் எதிர்ப்பு சக்தி (Immunity)
இந்த பூஸ்டர் டோஸ் தடுப்பூசி, டெல்டா மற்றும் ஒமைக்ரான் வகைகளுக்கு எதிராக சிறந்த பலனை அளித்துள்ளது. அதாவது, 19 முதல் 265 மடங்கு வரை நோய் எதிர்ப்பு சக்தியை பெற முடியும். இதன் மூலம், சர்வதேச தடுப்பூசியாக கோவாக்சின் விளங்குகிறது. அதாவது, மிகச்சிறந்த, பூஸ்டர் டோஸ் தடுப்பூசியாக கோவாக்சினை பயன்படுத்த முடியும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
மேலும் படிக்க
Share your comments