தங்கம் விலை சவரனுக்கு 560 ரூபாய் குறைந்திருப்பது, வாடிக்கையாளர்களையும், முதலீட்டாளர்களையும் மகிழ்ச்சி அடையச் செய்துள்ளது. கடந்த சில நாட்களாக அதிகரித்து வந்த தங்கத்தின் விலை தற்போது மாற்றம் காணப்படுவது முதலீட்டாளர்களை ஆறுதலடையச் செய்துள்ளது.
தங்கம் என்ற இந்த உலோகம், பல வேளைகளில் நமக்கு பலவழிகளில் கைகொடுக்கும் உலோகம். ஆபரணமாக அணியும்போது தனி கவுரவத்தைக் கொடுக்கும் தங்கம், நிதி நெருக்கடி ஏற்படும்போதும் தவறாமல் கைகொடுக்கிறது. எனவே எப்போதுமே, தங்கம் முதலீட்டிற்கான உலோகமாகவும் பார்க்கப்படுகிறது.
ஆனால் அண்மைகாலமாக சர்வதேச சந்தைகளில் நிலவி வரும் நிச்சயமற்றத்தன்மை காரணமாக, தங்கம் விலை ராக்கெட் வேகத்தை உயர்ந்து வருகிறது. ஒரு சவரன் தங்கம் ரூ.45 ஆயிரத்தை நெருங்கியது திருமணம் உள்ளிட்ட வைபவங்களை வைத்திருப்போரை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது.
ஏறுமுகமாக சென்ற தங்கம் விலை தற்போது வீழ்ச்சி அடைந்துள்ளது இல்லத்தரசிகளையும் முதலீட்டாளர்களையும் மகிழ்வித்துள்ளது.
ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.560 குறைந்து ரூ.45,200-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
சென்னை, தங்கத்தின் விலை கடந்த மார்ச் மாத தொடக்கத்தில் வரலாறு காணாத அளவு உயர்ந்து பவுன் ரூ. 44 ஆயிரத்தை தாண்டியது. அதன் பிறகு தங்கத்தின் விலை தினமும் ஏற்ற, இறக்கத்துடன் காணப்பட்டு வருகிறது.
இந்நிலையில், இன்று சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.560 குறைந்து ரூ.45,200-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஆபரணத் தங்கம் கிராமுக்கு 70 ரூபாய் குறைந்து ரூ 5,650-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
அதேபோல, வெள்ளியின் விலை ஒரு கிராம் ரூ.81.50-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ வெள்ளி ரூ.81,500-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
மேலும் படிக்க
தமிழ் உட்பட 13 மொழிகளில் இனி தேர்வு.. க்ரீன் சிக்னல் காட்டிய உள்துறை
Share your comments