பாகிஸ்தானில் வரலாறு காணாத கனமழையால், உயிர் பலி தொடங்கி பயிர்களும் நாசிமாகி உள்ளன. எனவே அத்தியவசிய தேவையான தக்காளி வெங்காயம் விலை உயர்ந்திருப்பது குறிப்பிடதக்கது.
பாகிஸ்தானில் வரலாறு காணாத கனமழையால், இதுவரை 1,100 பேர் பலியாகி உள்ளனர். 30 லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். கனமழை, வெள்ளம் காரணமாக பாகிஸ்தானில் காய்கறிகள் மற்றும் பழங்களின் விலை கடுமையாக உயர்ந்து உள்ளது. ஒரு கிலோ தக்காளி ரூ.500க்கும் , ஒரு கிலோ வெங்காயம் ரூ.400க்கும் விற்கப்படுகிறது. மழை தொடர்வதால், வரும் நாட்களில் ஒரு கிலோ தக்காளி ரூ.700ஐ தாண்டும் என்று கூறப்படுகிறது. கடும் தட்டுப்பாடு நிலவுவதால் காய்கறி உள்ளிட்ட உணவு பொருட்களை இந்தியாவில் காய்கறி உள்ளிட்ட உணவு பொருட்களை இந்கியாவில் இருந்து இறக்குமதி செய்ய பாகிஸ்தான் திட்டமிட்டுள்ளது.
ஜம்மு காஷ்மீருக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டு 3 ஆண்டுகளுக்கு பிறகு இந்தியாவுடனான வர்த்தகத்தை முறித்து கொண்டு பாகிஸ்தான் தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடி காரணமாக மீண்டும் வர்த்தகம் செய்ய முடிவு செய்துள்ளது. இது குறித்து பாகிஸ்தான் நிதி அமைச்சர் மிப்தா இஸ்மாயில் கூறுகையில், 'மழை, வெள்ளம் காரணமாக பலுசிஸ்தான், சிந்து மற்றும் தெற்கு பஞ்சாப் ஆகிய பகுதிகளில் இருந்து காய்கறிகள் இருந்து காய்கறிகள் விநியோகம் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் விலை கடுமையாக உயர்ந்திருப்பதை காண முடிகிறது.
வெள்ளத்தில் மூழ்கி பயிர்கள் நாசமாகி உள்ளதால், மக்களுக்காக காய்கறிகள் உள்ளிட்ட பிற உண்ணக்கூடிய பொருட்களை இந்தியாவிலிருந்து இறக்கு மதி செய்வது குறித்து அந் நாட்டு அரசாங்கம் பரிசீலிக்காலம்' என்று தெரிவித்துள்ளார்.
பிரதமர் மோடி கவலை
பிரதமர் மோடி நேற்று தனது ட்விட்டர் பதிவில், 'பாகிஸ்தானில் ஏற்பட்டுள்ள வெள்ள பாதிப்பு கவலை அளிக்கிறது. இதில் பலியானவர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன். அந்த நாட்டில் விரைவில் இயல்பு நிலை திரும்பும் என நம்புகிறேன்' என குறிப்பிட்டுள்ளார்.
மேலும் படிக்க:
TANHODA: வாழை கிளஸ்டர் அமைக்க திட்டம்: Agency-களுக்கு அழைப்பு!
Share your comments