தற்பொழுது இந்தியா கோவிட்-19ன் மூன்றாவது அலையை எதிர்கொள்கிறது, அதிலும் குறிப்பாக தென்னாப்பிரிக்காவில் முதன்முதலாக கண்டறியப்பட்ட ஓமிக்ரான் தொற்றால் அதிக பாதிப்பை சந்தித்து வருகிறது. இதிலிருந்து தற்காத்துக்கொள்ள ஒரே வழி கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை தவறாமல் கடைபிடிப்பது மட்டுமே.
இந்நிலையில் கடந்த வியாழக்கிழமையன்று மத்திய சுகாதார அமைச்சகம் COVID-19-ஐ எதிர்த்துப் போராடுவதற்கான சில பாதுகாப்பு முன்னெச்சரிக்கைகளை வெளியிட்டது.
1) 18 வயதுக்குட்பட்டவர்களுக்கு ஆன்டிவைரல்கள்(antivirals) அல்லது மோனோக்ளோனல்(monoclonal) ஆன்டிபாடிகளின் பயன்பாட்டுக்கு அனுமதி வழங்கப்படவில்லை.
2) Steroids பயன்படுத்தப்பட்டால், அவை மருத்துவ ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு 10 முதல் 14 நாட்களுக்குள் குறைக்க வேண்டும்.
3) குழந்தைகள் மற்றும் இளம் பருவத்தினருக்கு (18 வயதுக்குட்பட்ட) COVID-19 வழிகாட்டுதல்களின்படி, ஐந்து வயது மற்றும் அதற்குக் குறைவான குழந்தைகள் முக கவசம் அணிய தேவையில்லை என்றும் சுகாதார அமைச்சகம் தெரிவித்திருக்கிறது.
4) 6 முதல் 11 வயதுக்குட்பட்ட குழந்தைகள், அவர்களின் உடல்நிலையை பொறுத்து, பெற்றோரின் கண்காணிப்பில் பாதுகாப்பாகவும் சரியான முறையில் முக கவசம் அணியலாம், அதற்காக அலட்சியமாக இருக்க கூடாது.
5) 12 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்கள் பெரியவர்களுக்கு விதிக்கப்பட்ட அதே நிபந்தனைகளின் அடிப்படையில் முக கவசம் அணிதல் அவசியம்.
6) தற்போதுள்ள ஓமிக்ரான் வைரஸின் நோய் பரவலை கருத்தில் கொண்டு நிபுணர்கள் குழுவால் இவ்வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டுள்ளன.
7) COVID-19 ஒரு வைரஸ் தொற்று, இதில் antimicrobials-க்கு எந்தப் பங்கும் இல்லை என்பது குறிப்பிடதக்கது.
8) அறிகுறியற்ற மற்றும் லேசான நோய் பாதிக்கப்பட்டவர்களில், antimicrobials சிகிச்சை பரிந்துரைக்கப்படுவதில்லை என்றும் அமைச்சகம் தெரிவித்திருக்கிறது.
9) COVID-19 நோயின் அறிகுறியற்ற மற்றும் லேசான நோய் பாதிக்கப்பட்டவர்களுக்கு steroids பயன்படுத்தப்படுவது, தீங்கு ஏற்படலாம்.
10) சரியான நேரத்திலும், சரியான கால இடைவெளியிலும், சரியான அளவிலும் steroids-களை பயன்படுத்த வேண்டும் என்று கூறியுள்ளனர்.
11)அறிகுறிகள் தோன்றிய முதல் மூன்று முதல் ஐந்து நாட்களில் steroids தவிர்க்க வேண்டும் என்றும் கூறியுள்ளது.
பெறப்படும் தகவல்களின் அடிப்படையில் ஓமிக்ரான் மாறுபாடின் தீவிரம், சற்று குறைவானதுதான் என்று தெரிகிறது. இருப்பினும் நோய் பரவல் உருவாவதால், அதனை கவனமாக கண்காணிப்பது அவசியம் எனவே, அலட்சியம் வேண்டாம் எனவும் அமைச்சகம் தெரிவித்துள்ளது. septic shock ஏற்படுமாயின் நோயாளியின் உடல் எடைக்கு தகுந்தவாறு antimicrobials செலுத்தப்படும், இவை மருத்துவமனையில் தீவிர நோய் பாதிப்புக்கு ஆளானவர்களுக்கு மட்டுமே அளிக்கப்படுகிறது, என்பது குறிப்பிடதக்கது.
வரும் நாட்களில், தமிழகத்தில் கொரோனா தொற்று அதிகமாக வாய்ப்பு இருப்பதாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தமிழகத்தை தொடர்ந்து பிற மாநிலங்களிலும், தொற்று அதிகமாகும் வாய்ப்பு இருக்கிறது. இந்நிலையில் தொடர்ந்து தொற்று அதிகமாக இருந்த டெல்லி, மகாராஷ்டிராவில் தொற்றின் எண்ணிக்கை குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் படிக்க:
முடிவுக்கு வருகிறதா வடகிழக்கு பருவமழை? 5 நாட்களின் வானிலை நிலவரம்
காய்கறி விலையில் மாற்றம்.. கோயம்பேடு சந்தையின் காய்கறி விலை பட்டியல்!
Share your comments