கொரோனா இரண்டாவது அலையைக் கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை தமிழக அரசு எடுத்து வருகிறது. இந்நிலையில், நேற்று முதல் தமிழக்த்திற்கு உள்ளேயே பயணிக்க இ-பதிவு (E-Registration) முறையை கட்டாயமாக்கியுள்ளது தமிழக அரசு.
உரிய ஆவணங்கள்
மாவட்டம் விட்டு மாவட்டம் செல்வோர், உரிய ஆவணங்களை பதிவேற்றம் செய்தால் மட்டுமே, 'இ - பதிவு' முறையில் அனுமதி வழங்கப்படும்' என, தமிழ்நாடு மின்னாளுமை முகமை இயக்கக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கொரோனா தொற்றின் இரண்டாவது அலை, அதிவேகமாக பரவி வருகிறது. தொற்றை கட்டுப்படுத்த, 24ம் தேதி வரை முழு ஊரடங்கு (Full Curfew) அமல்படுத்தப்பட்டு உள்ளது. மாவட்டம் விட்டு மாவட்டம் செல்வதற்கும், மாவட்டத்திற்கு உள்ளே செல்வதற்கும், 'இ - பதிவு' அவசியம். மருத்துவ அவசரம், முதியோர் பராமரிப்பு, இறப்பு, இறப்பை சேர்ந்த காரியங்கள் போன்றவற்றுக்கு மட்டும் செல்ல, அனுமதி வழங்கப்படுகிறது. இதற்கு, eregister.tnega.org என்ற இணையதளத்தில் சென்று விண்ணப்பிக்க வேண்டும்; அதற்குரிய ஆவணங்களை சமர்ப்பிப்பதும் அவசியம்.
மருத்துவம், இறப்பு, முதியோர் பராமரிப்பு போன்ற தேவைகளுக்கு மட்டுமே, 'இ - பதிவு' வாயிலாக விண்ணப்பிக்க முடியும். அத்துடன், மாநிலம் விட்டு மாநிலம் வரும் தொழிலாளர்களுக்கும், மாவட்டங்களுக்குள் உள்ள நிறுவனங்களுக்கு தொழிலாளர்களை அழைத்துச் செல்லவும், 'இ - பதிவு' அவசியம். மேற்கூறிய அனைத்திற்கும் உரிய ஆவணங்களை, விண்ணப்பத்துடன் இணைக்க வேண்டும். ஆவணங்கள் இணைக்கப்படாவிட்டால், அனுமதி வழங்கப்படாது என்று தமிழக மின்னாளுமை முகமை இயக்கக அதிகாரிகள் கூறினர்.
திருமணத்திற்கு மீண்டும் அனுமதி
இ-பதிவு முறையில் ஏராளமானோர் திருமணத்திற்காக பயணிப்பதால் அந்த காரணம் நீக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து இன்று இ-பதிவு பெறுவதற்கான காரணங்களில் திருமணமும் சேர்க்கப்பட்டுள்ளது. இதன் மூலம் உரிய ஆவணங்களுடன் இ-பதிவு முறையில் திருமணத்திற்காக பயணிக்க விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க
ஊரடங்கிலும் வேளாண் பொருள் ஏற்றுமதியில் உச்சத்தைத் தொட்ட இந்தியா!
இன்று முதல் மாவட்டங்களுக்கு உள்ளேயும், வெளியேயும் பயணிக்க இ-பதிவு கட்டாயம்!
Share your comments