தேனி மாவட்டம் கூடலூர் பகுதியை சேர்ந்தவர் 26 வயதாகும் பால வெங்கடேஷ், இவர் பயன்படுத்தப்பட்ட பழைய செய்தித்தாள்களை காகித பைகளாக மாற்றி அதனை கடைகளில் விற்பனை செய்து தினசரி வருமானம் பார்த்து வருகிறார்.
எம்பிஏ பட்டப்படிப்பை முடித்துள்ள பால வெங்கடேஷ் , தற்போது தனியார் மருந்து கடையில் வேலை பார்த்து வருகிறார். இவர் கல்லூரியில் படிக்கும் போதிலிருந்தே அதிகாலை நேரத்தில் வீடு வீடாக சென்று செய்தித்தாளை விநியோகம் செய்யும் பணியில் சேர்ந்து தன்னுடைய 19 வயது முதல் தொடர்ச்சியாக 5 ஆண்டுகளாக பகுதி நேர வேலையாக கல்லூரி படிப்பை மேற்கொண்டவாரே செய்தித்தாள் விநியோகம் செய்யும் பணியில் பணியாற்றி வந்துள்ளார்.
செய்தித்தாள் விநியோகிக்கும் பணியில் இருந்த பொழுது , பயன்படுத்தப்பட்ட செய்தித்தாள்களை உபயோகமான பொருட்களாக மாற்ற பழைய செய்தித்தாள்களை காகித பைகளாக மாற்றி அதனை வியாபாரமாக செய்யலாம் என்று யோசனை இவருக்கு தோன்றியுள்ளது.
அதன்படி தனது பெற்றோர்களுடன் சேர்ந்து செய்தித்தாள்களை குறிப்பிட்ட விலைக்கு வெளியில் இருந்து வாங்கி அதனை வெவ்வேறு அளவுகளில் காகித பை ஆக தயாரித்து தேனி மாவட்டம் முழுவதும் உள்ள வணிக கடைகளுக்கு சென்று விநியோகித்து வருகிறார் .
பகல் நேரங்களில் இதர வேலைகளை முடித்துக் கொண்டு தினசரி மாலை வேலைகளில் காகிதப்பையை தயாரிக்கும் வேலையினை பால வெங்கடேஷ் மற்றும் அவரது குடும்பத்தார் செய்து வருகின்றனர்.
மேலும் படிக்க:
Share your comments