பிரதமர் நரேந்திர மோடி (PM Narendra Modi) அரசின் விவசாய கொள்கைளை எதிர்த்தும், திரும்பப் பெற கோரியும் பஞ்சாப், ஹரியானா, ராஜஸ்தான் மாநில விவசாயிகள் கடந்த 7 நாட்களாக டெல்லியில் போராட்டம் (Protest) நடத்தி வருகின்றனர். மத்திய அரசின் தற்போது அறிவித்துள்ள மூன்று புதிய விவசாயச் சட்டங்களால் தங்களுக்கு அதிகளவிலான பாதிப்புகள் ஏற்படுகிறது என்றும், கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு அதிகளவிலான பயன் உள்ளது என்பது விவசாயிகளின் கருத்து. இதன் காரணமாகவே புதிய விவசாயச் சட்டங்களை எதிர்த்து, திரும்பப் பெறக் கோரி விவசாயிகள் டெல்லி கடும் குளிரையும் பொருட்படுத்தாமலும் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
காய்கறிகளின் விலை உயர்வு!
விவசாயிகள் நடத்தும் போராட்டத்தின் எதிரொலியாக டெல்லி மற்றும் அதைச் சுற்றியுள்ள மாநிலங்களில் காய்கறிகளின் விலை (Vegetables Rate) அதிகளவில் உயர்ந்துள்ளது. மொத்த விலை காய்கறிகள் மற்றும் இதர விவசாய உற்பத்தி பொருட்களின் விநியோகம் தடைப்பட்டுள்ள காரணத்தால் காய்கறிகளின் மொத்த விலையில் 50 முதல் 100 ரூபாய் வரையில் அதிகரித்துள்ளது என டெல்லி காய்கறி வியாபாரிகள் (Delhi Vegetables Merchants) தெரிவித்துள்ளனர்.
காய்கறிகள் வரவு குறைவு:
முக்கிய வழித்தடம் பஞ்சாப், ஹரியானா, ராஜஸ்தான் ஆகிய 3 மாநில விவசாயிகளின் போராட்டத்தால் சிங்கூ மற்றும் டிகிரி எல்லை போக்குவரத்துப் பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் ஹிமாச்சல பிரதேசம் (Himachal Pradesh) மற்றும் ஜம்மு காஷ்மீர் (Jammu Kashmir) பகுதியில் இருந்து வரும் காய்கறிகளின் வரவு பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் டெல்லி காய்கறி வியாபாரிகள் பஞ்சாப், ஹரியானா, ராஜஸ்தான் ஆகிய 3 மாநிலங்கள் அல்லாமல் வேறு மாநிலங்களில் இருந்து காய்கறிகளை வாங்கத் துவங்கியுள்ள காரணத்தால், நேற்று முதல் மக்களுக்குத் போதுமான காய்கறிகள் தேவையான அளவிற்கு கிடைத்து வருவதாக டெல்லி வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.
விவசாயிகளுக்கு பல்வேறு தரப்பிலும் ஆதரவு பெருகி வரும் நிலையில், விவசாயிகளின் போராட்டம் விரைவில் வெற்றிபெற அனைவரும் எதிர்ப்பார்ப்போடு காத்திருக்கின்றனர்
Krishi Jagran
ரா.வ. பாலகிருஷ்ணன்
மேலும் படிக்க
பயிர் சேத அறிக்கையை அரசிடம் ஒப்படைக்கும் வேளாண் துறை!
விவசாய நிலத்திலிருந்த சீமைக்கருவேல மரங்களை அகற்றி, 100 நாள் வேலையாட்கள் சாதனை!
Share your comments