ஆந்திராவில், கொரோனா நோயாளிகளுக்கு நாட்டு மருத்துவர் வழங்கிய கத்திரிக்காய் மூலம் தயாரிக்கப்படும் ஆயுர்வேத சொட்டு மருந்துக்கு அம்மாநில அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
மருந்துக்கு மக்களிடையே ஆர்வம் (Curiosity among people for medicine)
நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தொற்று பரவல் அதிகரித்துவருவதால், ஆங்கில மருத்துவம் எனப்படும் அலோபதி மட்டுமல்லாது, இயற்கை மருந்துகளையும் வாங்கிப்பயன்படுத்தும் ஆர்வம் பொதுமக்களிடையே அதிகரித்துள்ளது. குறிப்பாக கொரோனாவில் இருந்து தப்பித்தால் போதும் என்கிற உயிர்பயம் ஏற்பட்டுள்ளது.
ஆயுர்வேத மருத்துவம் (Ayurvedic medicine)
அந்த வகையில், ஆந்திர மாநிலம், நெல்லூர் மாவட்டம், கிருஷ்ணப்பட்டினம் முத்துக்கூறு கிராமத்தை சேர்ந்தவர் ஆனந்தய்யா என்பவர் பல ஆண்டுகளாக பொதுமக்களுக்கு ஆயுர்வேத மருந்துகளை வழங்கி, வைத்தியம் பார்த்து வருகிறார்.
கத்திரிக்காய் சொட்டு மருந்து (Eggplant drops)
கொரோனாத் நோயாளிகளுக்காகத் தேன், வால் மிளகு, கத்திரிக்காய் போன்ற பொருட்கள் கொண்டு இவர் தயாரித்த மருந்துக்கு நல்ல பலன் கிடைத்துள்ளது. இதனால், அவரிடம் மருந்து வாங்க பல்வேறு மாநிலங்களில் இருந்து ஆயிரக்கணக்கான மக்கள் கிருஷ்ணப்பட்டினத்தில் குவியத் தொடங்கினர். இது கண்ணில் போடக்கூடிய சொட்டு மருந்தாகும்.
ஆய்வு செய்ய உத்தரவு (Order to inspect
இதுகுறித்து தகவலறிந்த ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி, ஆனந்தய்யாவின் ஆயுர்வேத மருந்து உண்மையில் கொரோனாத் தொற்றைக் குணப்படுத்துகிறதா என்பதை ஆய்வு செய்யுமாறு ஐசிஎம்ஆர் குழுவுக்கு உத்தரவிட்டிருந்தார்.
பக்க விளைவு இல்லை (No side effect)
இந்த மருந்தை ஆயுஷ் அமைச்சகம் மற்றும் திருப்பதி தேவஸ்தான ஆயுர்வேத நிபுணர்கள் ஆய்வு நடத்தினர். இதில் பக்க விளைவு ஏதும் இல்லை என நிரூபணம் ஆனது. இதனையடுத்து இந்த மருந்துக்கு ஆந்திர அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது.
அறிக்கை அடிப்படையில் முடிவு (Results based on the report)
இது தொடர்பாக மத்திய ஆயுர்வேத மருத்துவ கவுன்சில் வெளியிட்டுள்ள அறிக்கை அடிப்படையில், இந்த முடிவு எடுக்கப்பட்டு உள்ளது.
ஆந்திர அரசு அனுமதி (Andhra Pradesh Government Permission)
முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி தலைமையில், உயர் அதிகாரிகள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டத்தின் முடிவில், 'பி, எல்' மற்றும் 'எப்' என, சாதாரணமாக பெயரிடப்பட்ட மூன்று பாரம்பரிய மருந்துகளுக்கு, அனுமதி அளிக்க முடிவு செய்யப்பட்டது.
மேலும் படிக்க...
8 ஆசிய சிங்கங்களுக்கும் கொரோனா- தனி கூண்டில் தனிமைப்படுத்தப்பட்டன!
கொரோனா நோயாளிக்கு திருமணம் - கவச உடையில் தாலிக் கட்டிக்கொண்ட மணப்பெண்!
Share your comments