விவசாய மின் இணைப்பு உள்ளிட்ட பணிகளில் பயன்படுத்த, மின் வாரியம், 3,000 டிரான்ஸ்பார்மர்களை கொள்முதல் செய்ய உள்ளது. விவசாயத்திற்குத் தேவையான மின் இணைப்பை பல்வேறு சலுகைகளுடன் அளித்து வரும் மின்சாரத் துறை (Electricity), தற்போது விவசாயிகளின் நலன் காக்க டிரான்ஸ்பார்மர்களை கொள்முதல் செய்யத் திட்டமிட்டிருப்பது வரவேற்கத்தக்கது.
60 ஆயிரம் மின் இணைப்புகள்:
தமிழக மின் வாரியம், துணை மின் நிலையங்களுக்கு வரும் மின்சாரத்தை, மின் கம்பம், கேபிள் ஆகிய மின் வழித் தடங்களில் அனுப்பி, டிரான்ஸ்பார்மர் (Transformer) மற்றும் மின் விநியோக பெட்டி உதவியுடன் விநியோகம் செய்கிறது. வரும் மார்ச் மாதத்திற்குள், விவசாயத்திற்கு, சாதாரணம், விரைவு திட்டத்தின் கீழ், 60 ஆயிரம் மின் இணைப்புகள் வழங்கப்பட உள்ளன. அதற்கான பணி, முழுவீச்சில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்தப் பணி முடிவடைந்த பின்னர், விரைவாக விவசாயிகளுக்கு மின் இணைப்பு வழங்கப்படும்.
உதய் திட்டம்
மத்திய அரசின், 'உதய்' திட்டத்தின் (Uday Scheme) கீழ், பல்வேறு பகுதிகளில், புதிய மின் வழித் தடங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. அவற்றில் பயன்படுத்துவதற்காக, மின் வாரியம், தற்போது, 63 'கிலோ வோல்ட் ஆம்பியர்' திறனில், 3,000 டிரான்ஸ்பார்மர்களை வாங்க உள்ளது. மேலும், 15 ஆயிரம் கி.மீ., துாரத்திற்கு மின் கம்பியும்; 40 ஆயிரம் மின் கம்பங்களும் கொள்முதல் செய்யப்பட உள்ளன. அவற்றை தரமாக (Quality) வாங்குவதில், அதிக கவனம் செலுத்துமாறு, வாரிய பொறியாளர்களுக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது. கொள்முதல் பணி முடிவடைந்ததும், மின் இணைப்புக்கான பணிகள் தொடங்கப்பட்டு, விவசாயிகளுக்கு மின்சாரம் வழங்கப்படும்.
Krishi Jagran
ரா.வ. பாலகிருஷ்ணன்
மேலும் படிக்க
கூடுதல் மகசூல் பெற வம்பன்-4 பாசிப்பயறு இரகம்!
காரைக்காலில் தேசிய மின்னணு வேளாண் சந்தை திட்டம்! வேளாண்துறை அமைச்சர் தொடங்கி வைத்தார்!
தென்னை ஆராய்ச்சி பணியைத் துவங்க வேண்டுமென விவசாயிகள் அரசிடம் கோரிக்கை!
Share your comments