1. செய்திகள்

பெண் பயணிகளின் பாதுகாப்புக்காக எனது தோழி நடவடிக்கை! இந்திய ரயில்வேயின் புதிய திட்டம்!

KJ Staff
KJ Staff
Credit : Hindu Tamil

பெண் பயணிகளின் பாதுகாப்புக்கு ‛எனது தோழி' திட்டத்தை இந்திய ரயில்வே (Indian Railways) தொடங்கியுள்ளது. இரயிலில் பயணம் செய்யும் பெண்களுக்கு, பல்வேறு விதங்களில் பிரச்சனைகள் ஏற்படுகிறது. இதையெல்லாம் தவிர்க்க, முழுக்க முழுக்க பெண்களைப் பாதுகாக்கும் நோக்கத்தில் எனது தோழி திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது.

தென் கிழக்கு ரயில்வேயில் எனது தோழி திட்டம்:

தென் கிழக்கு ரயில்வேயில் (South Eastern Railway) பெண் பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் ‛எனது தோழி' திட்டம் கடந்த செப்டம்பர் மாதம் தொடங்கப்பட்டது. இந்த நடவடிக்கையானது ரயிலில் பயணிக்கும் பெண் பயணிகளுக்கு, புறப்படும் ரயில் நிலையத்திலிருந்து, சென்றடையும் ரயில் நிலையம் வரை பாதுகாப்பு (Protection) அளிக்கும் நோக்கில் தொடங்கப்பட்டதாகும்.
இத்திட்டம், பெண் பயணிகளிடம் (Female Passengers) பெரும் வரவேற்பை பெற்றதால், அனைத்து ரயில்வே மண்டலங்களுக்கும் இத்திட்டத்தை விரிவுபடுத்தப்ப, இந்தியன் இரயில்வே திட்டமிட்டது. இதன் காரணமாக, எனது தோழி திட்டத்தை இந்திய இரயில்வே கட்டுப்பாட்டின் கீழ் உள்ள அனைத்து இரயில்வே மண்டலங்களுக்கும், விரிவுப்படுத்தி செயல்படுத்தியுள்ளது. இந்திய இரயில்வே முழுவதும், அமலுக்கு வந்துள்ள இத்திட்டம் பெண்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

புகார் அளிக்க 182:

பயணத்தின் போது ஏதாவது பிரச்சனை ஏற்பட்டால், 182 எண்ணில் பெண்கள் புகார் (Complaint) அளிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. புகார் அளிக்கும் போது, தற்போது, அடுத்து வரப் போகும் இரயில் நிலையத்தை தெரிவிக்க வேண்டும். புகார் அளித்ததின் பேரில், அடுத்த இரயில் நிலையத்தில், பெண்களுக்கு உதவ இரயில்வே போலிஸ் (RPF) தயாராக இருப்பார்கள். பெண்களுக்கான பாதுகாப்பை உறுதி செய்யும் இத்திட்டம், இந்தியன் இரயில்வேயின் மிகச் சிறந்த திட்டமாகும்.

Krishi Jagran
ரா.வ. பாலகிருஷ்ணன்

மேலும் படிக்க...

1 லட்சம் தேக்கு மரக்கன்றுகள் நடும் பணி! பசுமையாக்கும் திட்டத்தில் வனத்துறை ஏற்பாடு

இளம் வழக்கறிஞர்களுக்கு 3000 ரூபாய் உதவித்தொகை! தமிழக அரசின் புதியத் திட்டம்!

English Summary: Enadhu Tholhi action for the safety of female passengers! Indian Railways launches! Published on: 31 October 2020, 07:33 IST

Like this article?

Hey! I am KJ Staff. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.