கொரோனா பெருந்தொற்று இன்னும் முடிவுக்கு வரவில்லை. எனவே, தொற்று தடுப்பு நடவடிக்கையில் அனைத்து மாநிலங்களும் விழிப்புடன் செயல்பட வேண்டும் என, மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா வேண்டுகோள் விடுத்துள்ளார். பல மாநிலங்களில் கொரோனா தொற்று பரவல் அதிகரிக்க துவங்கியுள்ளதை அடுத்து, அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களைச் சேர்ந்த சுகாதாரத் துறை அமைச்சர்கள், அதிகாரிகளுடன், மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா, 'வீடியோ கான்பரன்ஸ்' வாயிலாக நேற்று ஆலோசனை நடத்தினார்.
கொரோனா வைரஸ் (Corona Virus)
சுகாதாரத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா கூறுகையில், நாட்டின் பல்வேறு மாநிலங்களிலும் கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்துள்ளது. பரிசோதனைகள் குறைந்துள்ளன. சரியான நேரத்தில் பரிசோதனை செய்வதன் வாயிலாக மட்டுமே தொற்று பரவலை கண்டறிய முடியும். அதேபோல உருமாறிய வைரஸ் பரவலை கண்டறிய, மரபணு தொடர் பரிசோதனையில் அனைத்து மாநிலங்களும் கவனம் செலுத்த வேண்டும்.
கொரோனா பரவல் இன்னும் முடிவுக்கு வரவில்லை. தொற்று தடுப்பு நடவடிக்கையில் நாம் விழிப்புடன் செயல்படுவது அவசியம். சர்வதேச பயணியர் தொடர்ந்து கண்காணிக்கப்பட வேண்டும். தொற்று பாதிப்புக்கு எளிதில் ஆளாகக் கூடிய வயதினருக்கு தடுப்பூசி போடுவதில் அதிக அக்கறை செலுத்த வேண்டும்.
மேலும், 12 - 17 வயதுள்ளவர்களுக்கு முதல் மற்றும் இரண்டாம் டோஸ் தடுப்பூசி போடுவதை விரைவுபடுத்த வேண்டும். பள்ளிகளில் முகாம்கள் நடத்தப்பட வேண்டும்.
60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு வீடுகளுக்கே சென்று, 'பூஸ்டர் டோஸ்' தடுப்பூசி போட
வேண்டும். அது மட்டுமின்றி, 18 - 59 வயதினருக்கு தனியார் மருத்துவமனைகளில் பூஸ்டர் டோஸ் போடுவதை அமைச்சர்கள் ஆய்வு செய்ய வேண்டும் என்று அவர் கூறினார்.
மேலும் படிக்க
Share your comments