1. செய்திகள்

பரவும் காய்ச்சல்: பள்ளிகளுக்கு விடுமுறையா இல்லையா?

T. Vigneshwaran
T. Vigneshwaran
Epidemic Flu

தமிழகத்தில் காய்ச்சல் பரவிவரும் சுழலில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. இந்நிலையில், இது தொடர்பாக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம் அளித்துள்ளார்.

தமிழக முழுவதும் பொது சுகாதாரத் துறை சார்பில் இன்று 37 வது கோவிட் தடுப்பூசி முகாம் நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக சென்னை தி.நகரில் உள்ள எம்.எல்.ஏ. அலுவலகத்தில் கோவிட் தடுப்பூசி சிறப்பு முகாமை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் ஆய்வு செய்த பின் செய்தியாளர்களிடம் பேசினார்.

அப்போது, இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் சிறப்பு முகாம் தொடர்ந்து நடத்தப்பட்டு வருவதாகவும், வரும் அக்டோபர் 1ஆம் தேதிக்கு பிறகு தடுப்பூசி போடும் பணியில் சிறிய மாற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். மேலும், பூஸ்டர் தடுப்பூசி இலவசம் தொடருமா அல்லது தனியார் மருத்துவமனைகளில் கட்டணம் செலுத்தி போட்டு கொள்ள வேண்டுமா என்பது குறித்து இன்னும் சில நாட்களில் தெரியவரும் என கூறினார். மேலும், அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் பிறந்த குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை செலுத்தப்படும் தடுப்பூசிகள் புதன்கிழமைகளில் போடப்படும் என்றும் கூறியுள்ளார்.

தொடர்ந்து Influenza காய்ச்சல் பற்றி பேசிய அவர், 1044 பேர்கள் influenza காய்ச்சல் மூலம் பாதிக்கப்பட்டு உள்ளதாகவும், அதில் மருத்துவமனையில் 68 பேரும், மீதம் உள்ளவர்கள் வீடுகளிலேயே தனிமைப்படுத்தி கொண்டதாகவும் தெரிவித்துள்ளார். மேலும், பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கும் அவசியம் தற்போது தேவை இல்லை என்றும் தொடர்ச்சியாக பள்ளிக்கு விடுமுறை அளித்தால் குழந்தைகளின் படிப்பு பாதிக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

மேலும் படிக்க:

TNPSC குரூப் 3 தேர்வு, விண்ணப்பிக்க 10-ம் வகுப்பு தேர்ச்சி போதும்

மெரினாவில் கருணாநிதிக்கு பேனா நினைவுச் சின்னம்

English Summary: Epidemic Flu: Holidays or not for schools? Published on: 18 September 2022, 09:38 IST

Like this article?

Hey! I am T. Vigneshwaran. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.