1. செய்திகள்

ஊரடங்கால் வேலையிழந்தோருக்கு ESIC மூலம் 50% சம்பளம் - 3 மாதங்கள் வழங்க மத்திய அரசு முடிவு!!

Daisy Rose Mary
Daisy Rose Mary
ஊரடங்கால் வேலையிழந்தோருக்கு  ESIC மூலம் 50% சம்பளம்
Credit: Financial express

கொரோனா நெருக்கடியிலும், ஊரடங்கு காலத்தில் வேலையிழந்தோருக்கு ESIC திட்ட பயனாளிகளுக்கு, அவர்கள் பெற்ற ஊதியத்தில் 50 சதவீத தொகையை 3 மாதங்களுக்கு வழங்குவதற்கு வகைசெய்யும் வகையில் மத்திய அரசு விதிமுறைகளை தளர்த்தியுள்ளது.

இஎஸ்ஐ திட்டத்தின் கீழ் பயன் பெறும் தொழிலாளர்கள், வேலையில்லாமல் இருக்கும்போது, அவர்களுக்கு அடல் பிமித் வியக்தி கல்யாண் யோஜனா (Atal bimit vyakti kalyan yojana) திட்டத்தின்கீழ் நிவாரணத் தொகை அளிக்கப்படுகிறது. இந்தத் திட்டத்தை, 2021 ஜூன் 30-ம் தேதி வரை மேலும் ஓராண்டுக்கு நீட்டிப்பதென இஎஸ்ஐ நிறுவனம் தீர்மானித்துள்ளது

தளர்த்தப்பட்ட நிபந்தனைகளின்படி, அதிகரிக்கப்பட்டுள்ள நிவாரணத்தொகை 24.03.2020-லிருந்து 31.12.2020 வரையிலான காலத்திற்கு வழங்கப்படும். அதற்கு பிறகு, அதாவது 01.01.2021 முதல் 30.06.2021 வரையிலான காலத்திற்கு தளர்த்தப்படாத முந்தைய நிபந்தனைகளுடன் இந்தத் திட்டம் தொடரப்படும். 31.12.2020-க்கு பிறகு தளர்த்தப்பட்ட நிபந்தனைகள் குறித்து மறு ஆய்வு செய்யப்படும்.

தளர்த்தப்பட விதிமுறைகள்

  • நிவாரணம் கோரும் காலத்தில் அவர்கள் வேலையிழந்தவராக இருக்க வேண்டும்.

  • ஊழியர்களின் தினசரி ஊதியத்தில் 25 சதவீத தொகையை ESI பங்களிப்பிலிருந்து பெற முடியும். இது தற்போது 50 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. இதன் மூலம் 90 நாட்களுக்கான பங்களிப்பை பெற முடியும்.

  • காப்பீடு கோரும் வகையிலான பணியில் அவர்கள் 2 ஆண்டுகள் பணியாற்றியிருக்க வேண்டும் என்ற விதிமுறையும் உள்ளது. இந்தகால கட்டத்தில் அவர்களது பங்களிப்பு குறைந்தபட்சம் 78 நாட்களுக்கு செலுத்தப்பட்டிருக்க வேண்டும்.

  • இதில் அக்டோபர் 1, 2019 முதல் மார்ச் 31, 2020 வரையான காலத்தில் உறுப்பினர்பங்களிப்பு செலுத்தப்பட்டிருக்க வேண்டியது அவசியம்.

  • காப்பீடு செய்யப்பட்ட நபர் கடைசி ESIC கிளை அலுவலகத்தில் நேரடியாக கோரிக்கையை சமர்ப்பிக்லாம், இதன் மூலம் அவர்களின் வங்கி கணக்கில் பணம் நேரடியாக செலுத்தப்படும்.


மேலும் படிக்க...

கிசான் கிரெடிட் கார்டு மூலம் ரூ.1,02,065 கோடி சலுகை கடன்- மத்திய அரசு!!

கொரோனா நெருக்கடியிலும் காரீஃப் விதைப்பு அதிகரிப்பு!!



English Summary: ESIC members who lost their jobs on Covid can claim 50 percent of average wage Published on: 22 August 2020, 06:31 IST

Like this article?

Hey! I am Daisy Rose Mary. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.