ஊழியர்களின் மாநில காப்பீட்டுக் கழகம் (ESIC) 3865 மல்டி-டாஸ்கிங் ஸ்டாஃப் (MTS), மேல் பிரிவு எழுத்தர் (UDC) மற்றும் ஸ்டெனோகிராபர் (குரூப் 'C'' பதவிகள்) ஆட்சேர்ப்புக்கான விண்ணப்பங்களை வரவேற்கிறது. விண்ணப்பிக்க கடைசி தேதி பிப்ரவரி 15, 2022 ஆகும். விண்ணப்பிக்க ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ இணையதளமான esic.nic.in ஐப் பார்வையிடவும் .
10 ஆம் வகுப்பு மட்டுமே தேர்ச்சி பெற்றவர்களும், இந்த வேலைவாய்ப்பிற்கு விண்ணப்பிக்கலாம். அவர்களுக்கு இது ஒரு அற்புதமான வேலை வாய்ப்பு .
ESIC ஆட்சேர்ப்பு 2022: அறிவிப்பு விவரங்கள் (ESIC Recruitment 2021: Notice Details)
ஆன்லைன் விண்ணப்பம் சமர்ப்பிப்பதற்கான தொடக்க தேதி: ஜனவரி 15, 2022
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: பிப்ரவரி 15, 2022.
கட்டணம் செலுத்துவதற்கான கடைசி தேதி: பிப்ரவரி 15, 2022
ESIC: MTS, UDC, Steno ஆட்சேர்ப்பு 2022: தகுதி (ESIC: MTS, UDC, Steno Recruitment 2022: Eligibility)
MTS: அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் மற்றும் வாரியத்திலிருந்து மெட்ரிகுலேஷன் அல்லது அதற்கு சமமான தேர்ச்சி பெற்றிருத்தல் அவசியம்.
UDC : அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் ஏதேனும் ஒரு துறையில் இளங்கலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
ஸ்டெனோகிராபர்: இந்தியாவில் அங்கீகரிக்கப்பட்ட எந்த வாரியத்திலும் 10+2 இடைநிலைத் தேர்ச்சி மற்றும் டிக்டேஷன்: 10 நிமிடங்கள் @ நிமிடத்திற்கு 80 வார்த்தைகள். டிரான்ஸ்கிரிப்ஷன்: 50 நிமிடங்கள் (ஆங்கிலம்), 65 நிமிடங்கள் (இந்தி) (கணினியில் மட்டும்).
ESIC: MTS UDC Steno ஆட்சேர்ப்பு 2022: விண்ணப்பக் கட்டணம் (ESIC: MTS UDC Steno Recruitment 2022: Application Fee)
கிரெடிட் கார்டு/டெபிட் கார்டு/நெட் பேங்கிங் மூலம் தேர்வுக் கட்டணத்தைச் செலுத்தவும்.
Gen/ OBC-க்கு: ரூ. 500/-
SC/ST/PH/பெண்களுக்கு: ரூ. 250/- என கட்டணம் செலுத்த வேண்டும்.
எப்படி விண்ணப்பிப்பது (How to apply)
ஆர்வமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். ESIC, UDC, MTS & Stenographer காலியிடங்களுக்கு விண்ணப்பிப்பதற்கான நேரடி இணைப்பு இப்பதிவின் முடிவில் கொடுக்கப்பட்டுள்ளது
ESIC ஆட்சேர்ப்பு 2022: சம்பளம் விவரம் (ESIC Recruitment 2021: Salary Details)
UDC & ஸ்டெனோ: 7 வது ஊதியக் குழுவின் படி நிலை 4 (ரூ. 25500- 81000) வழங்கப்படும்.
MTS: 7 வது ஊதியக் குழுவின்படி ஊதிய நிலை 1 (ரூ 18000- 56900) இருக்கும்.
அதிகாரப்பூர்வ இணையதளம் : https://www.esic.nic.in/
மேலும் படிக்க:
SEBI ஆட்சேர்ப்பு 2022: ரூ. 1.15 லட்சம் வரை சம்பளம் பெற பொன்னான வாய்ப்பு
Share your comments