ஓமைக்ரான் தாக்கத்தை முதன்முதலில் உலகுக்கு கண்டுபிடித்து எடுத்துரைத்தவர் தென்னாப்பிரிக்க வைரஸ் விஞ்ஞானி டாக்டர் ஏஞ்சலிக் கோட்சீ. இந்தியாவில் ஓமைக்ரான் (Omicron) தாக்கம் அதிகரித்து வருகிறது. இதனை அடுத்து அவர் ஒரு முக்கிய அறிக்கையை வெளியிட்டுள்ளார்.
மிதமான பாதிப்பு (Moderate Effect)
வரும் நாட்களில் இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் ஓமைக்ரான் தாக்கம் அதிகரிக்கும் என்பதில் சந்தேகமில்லை. இதனால் பலர் பாதிக்கப்படுவர். ஆனால் இது உயிரைப் பறிக்கும் அளவுக்கு மோசமான பாதிப்பு இருக்காது. தற்போது மிதமான அறிகுறிகளுடன் ஏற்படும் இந்த பாதிப்பில் இருந்து விடுபடுவர்.
தடுப்பூசி (Vaccine)
இரண்டு டேஸ் கோவிஷீல்டு அல்லது கோவாக்ஸின் தடுப்பு மருந்து செலுத்தப்பட்டவர்கள் விரைவில் பூரண நலம் பெறுவர். அதே சமயத்தில் ஒரு டோஸ் தடுப்பு மருந்து கூட செலுத்திக் கொள்ளாதவர்களுக்கு பாதிப்பு அதிகம் ஏற்பட வாய்ப்புள்ளது என்று எச்சரித்துள்ளார்.
தென்னிந்திய மாநிலங்களில் தற்போது ஓமைக்ரான் தாக்கம் அதிகரித்து வருகிறது. இதனை அடுத்து மாநில அரசுகள் மீண்டும் ஊரடங்கு கட்டுப்பாடுகளை அறிவித்து வருகின்றன. மேலும் தற்போது முதலே மருத்துவமனைகளின் படுக்கைகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க
Share your comments