கிரிக்கெட் ரசிகர்களுக்காக, ‘சென்னை சூப்பர் கிங்ஸ்’ அணியுடன் இணைந்து, சலுகையுடன் கூடிய, புதிய கிரெடிட் கார்டை, ஐ.சி.ஐ.சி.ஐ., வங்கி (ICICI Bank) அறிமுகம் செய்துள்ளது. இதுகுறித்து, ஐ.சி.ஐ.சி.ஐ., வங்கி வெளியிட்டிருக்கும் செய்திக்குறிப்பில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியுடன் இணைந்து, கூட்டு பிராண்டு கிரெடிட் கார்டு அறிமுகப்படுத்தப்பட்டு என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.
கிரெடிட் கார்டு (Credit Card)
‘சென்னை சூப்பர் கிங்ஸ் ஐ.சி.ஐ.சி.ஐ., வங்கி கிரெடிட் கார்டு’ என இதற்கு பெயர் வைக்கப் பட்டு உள்ளது. இந்த அணியின் லட்சக்கணக்கான ரசிகர்களுக்காக, பிரத்யேக சலுகையுடன் கூடிய கார்டு தயாராகி உள்ளது. இந்த கிரெடிட் கார்டை பெறுவதன் வாயிலாக, சென்னை சூப்பர் கிங்ஸ் அணி விளையாடும் போட்டிகளுக்கான சீசனின் போது, டிக்கெட்டுகளை இலவசமாக பெறலாம்.
புதிதாக இணைதல் மற்றும் கார்டை புதுப்பித்தலின் போது, 2,000 வெகுமதி புள்ளிகளை இலவசமாக பெறலாம். மாதாந்திர அதிக செலவு செய்பவர்களுக்கு, முக்கிய வீரர்களால் கையொப்பமிட்ட நினைவுச் சின்னங்கள் வழங்கப்படும். அணியின் பயிற்சியின் போது கலந்து கொள்ளும் வாய்ப்பு உட்பட, மேலும் பல்வேறு சலுகைகள் வழங்கப்படும்.
நாளை மறுநாள் ஐபிஎல் தொடங்க உள்ள நிலையில், இந்த செய்தி கிரிக்கெட் ரசிகர்களுக்கு விருந்தாக அமையும் என்பதில் ஐயமில்லை. இந்த கிரெடிட் கார்டை பெற அருகிலுள்ள ஐசிஐசிஐ வங்கியைத் தொடர்பு கொள்ளுங்கள்.
மேலும் படிக்க
மூங்கில் பூங்கா: அபூர்வ மரங்களுடன் அழகிய காட்சி!
முடிவுக்கு வருகிறது கொரோனா கட்டுப்பாடுகள்: மத்திய அரசு தகவல்!
Share your comments